இலங்கையின் மாவட்டங்கள்
இலங்கையில் உள்ள நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் மாவட்டங்கள் (disticts) என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்[2] மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.[3] நடுவண் அரசு மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.[4] அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.[5]
மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.[1] பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]
Remove ads
மாவட்டத் தரவுகள்
2012 கணக்கெடுப்பின் படி, மாவட்ட ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:
Remove ads
மேலும் சில தகவல்கள்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
மாவட்டம் | பிரதேச செயலாளர் பிரிவு | பிரதேச சபைகள் | மாநகரங்கள் | நகரங்கள் | வட்டாரங்கள் | தேர்தல் தொகுதிகள் | ஊரூழியர் பிரிவுகள் | கிராமங்கள் | மக்கள்தொகை | 1981-2001 வளர்ச்சிவீதம் | மக்களடர்த்தி | பரப்பளவு | நீர் |
கொழும்பு | 13 | 6 | 4 | 3 | 121 | 15 | 557 | 808 | 2234289 | 1.3 | 3305 | 699 | 23 |
கம்பகா | 13 | 12 | 2 | 5 | 72 | 13 | 1177 | 1911 | 2066096 | 1.9 | 1541 | 1387 | 46 |
களுத்துறை | 14 | 10 | 0 | 4 | 35 | 8 | 762 | 2652 | 1060800 | 1.2 | 673 | 1598 | 22 |
கண்டி | 20 | 17 | 1 | 4 | 58 | 13 | 1188 | 2987 | 1272463 | 1 | 664 | 1940 | 23 |
மாத்தளை | 11 | 11 | 1 | 0 | 13 | 4 | 545 | 1355 | 442427 | 1.1 | 227 | 1993 | 41 |
நுவரெலியா | 5 | 5 | 1 | 2 | 24 | 4 | 491 | 1421 | 700083 | 0.7 | 410 | 1741 | 35 |
காலி | 18 | 15 | 1 | 2 | 37 | 10 | 896 | 2311 | 990539 | 1 | 613 | 1652 | 35 |
மாத்தறை | 16 | 12 | 1 | 1 | 21 | 7 | 650 | 1598 | 761236 | 0.8 | 599 | 1283 | 13 |
அம்பாந்தோட்டை | 12 | 9 | 0 | 2 | 12 | 4 | 576 | 1319 | 525370 | 1.1 | 210 | 2609 | 113 |
யாழ்ப்பாணம் | 14 | 12 | 1 | 3 | 52 | 10 | 435 | 954 | 490,621* | -2 | 528 | 1025 | 96 |
வவுனியா | 4 | 4 | 0 | 1 | 11 | 1 | 102 | 527 | 149,835* | 2.2 | 81 | 1996 | 116 |
முல்லைத்தீவு | 4 | 4 | 0 | 0 | 0 | 1 | 127 | 516 | 121,667* | 2.2 | 50 | 1967 | 106 |
கிளிநொச்சி | 3 | 3 | 0 | 0 | 0 | 1 | 95 | 258 | 127,263* | 1.6 | 106 | 2617 | 202 |
மட்டக்களப்பு | 12 | 10 | 1 | 1 | 19 | 3 | 345 | 857 | 486,447* | 1.9 | 186 | 2854 | 244 |
அம்பாறை | 19 | 14 | 0 | 2 | 9 | 4 | 504 | 876 | 589344 | 2 | 140 | 4415 | 193 |
திருகோணமலை | 10 | 10 | 0 | 1 | 12 | 3 | 230 | 645 | 340,158* | 1.4 | 135 | 2727 | 198 |
குருநாகல் | 27 | 18 | 1 | 1 | 21 | 14 | 1610 | 4509 | 1452369 | 0.9 | 314 | 4816 | 192 |
புத்தளம் | 16 | 10 | 0 | 2 | 20 | 5 | 548 | 1284 | 705342 | 1.8 | 245 | 3072 | 190 |
அனுராதபுரம் | 22 | 18 | 1 | 0 | 10 | 7 | 694 | 3085 | 746466 | 1.2 | 112 | 7179 | 515 |
பொலன்னறுவை | 7 | 6 | 0 | 0 | 0 | 3 | 290 | 657 | 359197 | 1.6 | 117 | 3293 | 216 |
பதுளை | 15 | 14 | 1 | 2 | 29 | 9 | 567 | 2229 | 774555 | 0.9 | 274 | 2861 | 34 |
மொனராகலை | 11 | 10 | 0 | 0 | 0 | 3 | 319 | 1198 | 396173 | 1.8 | 72 | 5639 | 131 |
இரத்தினபுரி | 17 | 13 | 1 | 1 | 24 | 8 | 575 | 1941 | 1008164 | 1.2 | 312 | 3275 | 39 |
கேகாலை | 11 | 10 | 0 | 1 | 11 | 9 | 573 | 1677 | 779774 | 0.6 | 463 | 1693 | 8 |
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads