கடங்கா தொலைக்காட்சி கோபுரம்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தொலைக்காட்ட்சி கோபுரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கடங்கா தொலைக்காட்சி கோபுரம் (Katanga TV Tower) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சபல்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. எஃகு மற்றும் கற்காரை கட்டுமானத்தால் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு மாவட்டத்திற்கான முக்கிய தகவல் தொடர்பு சமிக்ஞை ஒளிபரப்பு வசதிக்காக இக்கோபுரம் கட்டப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. நாட்டின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. இக்கோபுரத்தின் உயரம் 225 மீட்டர் அல்லது 738 அடியாகும். இந்தியாவில் 16 ஆவது மிக உயர்ந்த கட்டிடம் என்ற தரவரிசையில் கடங்கா தொலைக்காட்சி கோபுரம் இடம்பெற்றுள்ளது.

விரைவான உண்மைகள் கடங்கா தொலைக்காட்சி கோபுரம் Katanga TV Tower, பொதுவான தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads