கடற்கன்னி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடற்கன்னி (mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும்.[1] கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில் காணப்பட்டது. அட்டாகடிசு எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும் அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல், அவை மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியுமென்று கூறுகின்றது.
Remove ads
குறிப்புகள்
மேலதிக வாசிப்பு
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads