அசிரியா

From Wikipedia, the free encyclopedia

அசிரியா
Remove ads

பண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினிவேவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது.[1][2]

Thumb
அசிரியப் பேரரசு
Thumb
மெசொப்பொத்தேமியா நாகரீக கால அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் பகுதிகள்
Thumb
லம்மசு என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.

அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.

அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.

Remove ads

முற்பட்ட வரலாறு

அசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.

மேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.

Remove ads

தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்

அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.

பிந்தைய அசிரியப் பேரரசுகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads