கடல் (திரைப்படம்)
மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடல் (ⓘ) இயக்குநர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன[1]. நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது[2]. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது[3][4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads