குரு சோமசுந்தரம்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

குரு சோமசுந்தரம்
Remove ads

குரு சோமசுந்தரம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என்றழைக்கப்படுகிறார். தற்பொழுது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

Thumb
வினோத் என்பவரால் எடுக்கப்பட்ட குரு சோமசுந்தரத்தின் புகைப்படம்
விரைவான உண்மைகள் குரு சோமசுந்தரம், பிறப்பு ...
Remove ads

திரைப்படத்துறை

குரு சோமசுந்தரம் 2002 - 2011 ஆண்டு காலத்தில் கூத்துப்பட்டறையில் இணைந்து நாடகங்களை உருவாக்கினார்.

2003 ஆம் ஆண்டு சந்திரஹரி நாடகத்தில் இவரைக் கண்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2008 ஆம் ஆண்டு இவரை அழைத்து தனது ஆரண்ய காண்டம் எனும் திரைப்படத்தில் 'காளையன்' எனும் வேடத்தில் நடிக்க வைத்தார்[1]. அவ்வேடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. பின், 2013 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

கூத்துப்பட்டறையிலிருந்து வெளியேறிய பின் 2013 ஆம் ஆண்டு 5 சுந்தரிகள் எனும் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்ததின் வாயிலாக மலையாளத் திரையுலகில் கால் பதித்தார்[1]. இதே ஆண்டில் இயக்குநர் சுசீந்தரனின் பாண்டிய நாடு திரைப்படத்தில் விசாலின் அண்ணனாக வேடமேற்று நடித்தார். 2014 ஆம் ஆண்டில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடிப்புக் கலை பயிற்றுனராக நடித்திருந்தார். நிகழ் வாழ்க்கையிலும் பாபி சிம்காவுக்கு இவர் நடிப்புக் கலையை பயிற்றுவித்தார்.[2].

Remove ads

குறும்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

திரைப்பட விவரம்

நடித்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

வலைத் தொடர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வலைத் தொடர் தலைப்பு ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads