கடியநெடுவேட்டுவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடியநெடுவேட்டுவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். கோடைமலை அரசன். இவன் நாயுடன் வேட்டைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். இதனால் இவனைக் கடியநெடுவேட்டுவன் என்றே பெயரிட்டு வழங்கலாயினர்.
இவனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாகும். இதிலுள்ள கடிய என்பது இம்மன்னனின் ஊரினைக் குறிப்பிடுகிறது. இவ்வூராணது கோடைமலை எனப்படும் கொடைக்கானலின் அடிவாரத்தில் அமையப்பெற்ற ஒரு ஊர் ஆகும். இவன் தன்னை தஞ்சம் என தேடி வந்தோர்க்கு தன் தலையையும் கொடுக்க முன்வந்த வள்ளல் பரம்பரையினன். தன்னை எதிர்த்தவரை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை கொண்ட வீர மறவன்.
Remove ads
புறநானூற்றில் கடிய நெடுவேட்டுவன்
பாடியவர்: பெருந்தலைச்சாத்தனார்
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண். துறை: பரிசில்.
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.
புறநானூற்றுப்பாடல் - 206
- முற்றிய திருவின் மூவேந்தரே ஆனாலும் அன்பின்றிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன். கடலுக்குச் சென்ற மேகம் நீரை வாங்காமல் திரும்பாதது போல நான் உன்னிடமிருந்து களிற்றைப் பரிசிலாகப் திரும்பமாட்டேன், என்கிறார். - புறநானூறு 205
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads