கடிய சிறுநீரகக் காயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடிய சிறுநீரகக் காயம் (acute kidney injury, AKI), முன்னதாக கடிய சிறுநீரகச் செயலிழப்பு (acute renal failure, ARF),[1] என்பது மிக விரைவான சிறுநீரகச் செயலிழைப்பைக் குறிக்கும். இதன் காரணங்கள் பலவாயினும் குருதியின் அளவு குறைதல் (குருதி வெளியேற்றம், நீர்மக்குறைவு போன்ற எக்காரணத்தாலும்), சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களுக்கு (சில வேதிகளும் மருந்துகளும்) வெளிப்படுத்தல், சிறுநீர்ப்பாதை அடைப்பு என்பன குறிப்பிடத்தக்கன.
இந்த நோய் ஆய்வகச்சோதனைகளில் குருதியில் யூரியா வடிவத்தில் உள்ள நைத்ரசனின் (BUN) மற்றும் கிரியாட்டினின் அளவு உயர்ந்திருத்தல் அல்லது போதிய அளவில் சிறுநீர் வெளியேற்றாதிருத்தல் ஆகியன கொண்டு கண்டறியப்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம், மிகை பொட்டாசியம், மிகை யூரியா, உடல் நீர்மச் சமநிலையில் மாற்றங்கள் போன்ற கோளாறுகளும் ஏனைய உறுப்புகளுக்குப் பாதிப்பும் ஏற்படுகின்றன. சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சை போன்ற ஆதரவான கவனிப்பு மற்றும் அடிப்படை காரணியை குணப்படுத்துதல் என இதற்கான சிகிட்சை மேலாளப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads