கடுகு (திரைப்படம்)
விஜய் மில்டன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடுகு (Kadugu) விஜய் மில்டன் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும், சூர்யா, பாரத் சீனி, விஜய் மில்டன் ஆகியோருடன் இணைந்து விஜய் மில்டன் தயாரிப்பிலும் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் பரத், இராஜகுமரன், இராதிகா பிரசித்தா, சுபிக்ஷா, ஏ. வெங்கடேஷ் ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எஸ். என். அருணகிரியின் பாடலிசையிலும் ஜெ. அனூப் சீலின் பின்னணியிசையிலும், ஜெ. ஆர். ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பில் மார்ச்சு 2017இல் திரையரங்குகளில் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1]
Remove ads
நடிப்பு
- பரத்- நம்பியாக
- இராஜகுமரன் - பாண்டி (புலி ஜெ. பாண்டி)
- இராதிகா பிரசித்தா - எபியாக
- சுபிக்ஷா
- பாரதி சீனி- அனுருத்தாக
- ஏ. வெங்கடேஷ்
- பிளவர் ஏ. மனோகரன்
- பாலஜி சக்திவேல் - மதிப்புறுத்தோற்றம்
- விஜய் மில்டன்- மதிப்புறுத்தோற்றம்
கதை
தக்க நேரம் வந்தால் பேருருவம் எடுத்துவிடும் ஒரு எளியவனின் கதையே கடுகு. புலி வேடக் கலைஞரான பாண்டி (இராஜகுமாரன்). இப்புலிவேடக்கலை அழிந்து வருவதால் அவர் வறுமையில் இருக்கின்றார். தரங்கம்பாடியில் காவல்துறை அலுவலராகப் பணியில் இருக்கும் வெங்கடேசுக்கு உதவி செய்ய அவருடன் செல்கிறார் பாண்டி. அந்த ஊரில் உள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற அளவிற்கு நன்மைகளைச் செய்கின்றார். நம்பி பரத் அதே ஊரில் உள்ள ஒர் இளம் அரசியல்வாதி. இளைஞர்களிடேயே பேர் பெற்ற குத்துச்சண்டை வீரர். நம்பியின் ஊருக்கு வரும் அமைச்சர் ஒருவர் தவறான ஒன்றினைச்செய்து விடுகின்றார். அந்தத் தவறின் பக்க விளைவுகள் என்ன? அதில் நம்பியின் பங்கு என்ன? பாண்டிக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன ஆகிய வினாக்களுக்கான விடைகளை அளிக்கின்றது இப்படத்தின் கதை.[2]
Remove ads
இசை
இத்திரைப்படம் எஸ். என். அருணகிரியின் பாடலிசையிலும் ஜெ. அனூப் சீலின் பின்னணியிசையிலும் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி, எழுதியுள்ளனர். மகளிர் மட்டும் திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்டத்திற்கு 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் இசை வெளியீட்டினைச் செய்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads