கட்ச் பாலைவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்ச் பாலைவனம் அல்லது ரண் ஆஃப் கட்ச் (Rann of Kutch) (குசராத்தி: કચ્છનું મોટું રણ Sindhi: رڻ ڪڇ), ரண் என்ற குஜராத்திச் சொல்லுக்கு பாலைவனம் எனப் பொருள்.
உப்புக் கனிமங்கள் கொண்ட 10,000 சதுர மைல் பரப்பளவுடைய சதுப்பு நிலமாகும். இந்நிலப்பகுதி இந்தியாவின், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலும், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்திலும் பரந்து உள்ளது.
குஜராத்தில் உள்ள 'ரண் ஆஃப் கட்ச்' உலகின் பெரிய உப்பு பாலைவனம் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. அகமதாபாத்திலிருந்து 320 கி.மீ., தொலைவில் ரான் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம் கொண்டது. பன்னி எனப்படும் புல்வெளி பகுதிகள் ரான் ஆப் கட்ச் கொண்டிருப்பதால் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது.[1].
ரண் ஆஃப் கட்ச் பகுதி, கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம் (Great Raan of Kutch) என்றும் சிறிய ரண் ஆஃப் கட்ச் (Little Raan of Kutch) என்று இரண்டு முக்கியப் பகுதிகளாக அமைந்துள்ளது.
இங்கு வளரும் சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள், இப்பகுதிக்கு இயற்கை அரணாக உள்ளன. [2]. நீல்காய் எனப்படும் மான்கள் மற்றும் ஆசியக் காட்டுக் கழுதைகள் இனங்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளன.
Remove ads
வனவிலங்கு சரணாலயங்களும் காப்புக்காடுகளும்
ரண் ஆஃப் கட்ச் பகுதியில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயங்கள் மற்றும் காப்புக்காடுகள்:
- இந்திய காட்டு கழுதை சரணாலயம்
- கட்ச் பாலைவன விலங்குகள் காப்பகம்
- கட்ச் பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்
- பன்னி புல்வெளி காப்புக் காடுகள்
- சாரி-தந்து சதுப்புநில காப்புக் காடுகள்
படக்காட்சியகம்
- ரண் ஆஃப் கட்ச், வெள்ளைப் பாலை நிலம்
- ரண் ஆஃப் கட்சின் உயரமான இடம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads