கட்ச் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

கட்ச் இராச்சியம்map
Remove ads

கட்ச் இராச்சியம், இராசபுத்திர குலத்தவர்களால் தற்போதைய கட்ச் மாவட்டத்தில் 1147ல் நிறுவப்பட்டது. கட்ச் இராச்சியத்தின் பாதுகாப்புப் படையில் 354 குதிரைப் படைகள், 1412 தரைப்படைகள் மற்றும் 164 பீரங்கிகள் கொண்டிருந்தனர். கட்ச் இராச்சியத்தின் தன்னாட்சி கொண்ட இறுதி மன்னராக ஜாம் ராவல் 1524 முடிய அரசாண்டார். முகலாயர் ஆட்சியில் கட்ச் இராச்சியம் முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது. 1819 முதல் பிரித்தானிய இந்தியாவில் சுதேச சமஸ்தானமான இருந்தது. இறுதியாக 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், கட்ச் இராச்சியம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் கட்ச் இராச்சியம்કચ્છ રિયાસત, தலைநகரம் ...
Remove ads

வரலாறு

Thumb
சிந்து மற்றும் கட்ச் வரைபடம், 1827

சிந்துவிலிருந்து வந்த சம்மா குலத்தின் லக்கோ ஜடானி என்பவர் கட்ச் இராச்சியத்தை கி பி 1147-இல் நிறுவினார். இவர் லக்கியாவீரா எனும் நகரத்தை நிறுவி கிழக்கு கட்ச் பகுதியை 1147 முதல் 1175 முடிய அரசாண்டார்.[1] [2] அதே கால கட்டத்தில் மேற்கு மற்றும் மத்திய கட்ச் பகுதி காதி, வகேலா மற்றும் சோலாங்கி குல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1215ல் கட்ச் மன்னராக இருந்த ரைதான் ரத்தோவின் மறைவிற்குப் பின்னர், அவரது நான்கு மகன்களான ஓதாஜி, தேதாஜி, ஹோதிஜி மற்றும் கஜ்ஜன்ஜி கட்ச் இராச்சியத்தை நான்காகப் பிரித்துக் கொண்டு, கூட்டாச்சி முறையில் அரசாண்டனர். லக்கிவீரா நகரம் கட்ச் இராச்சியத்தின் முதல் தலைநகராக 1548 முடிய விளங்கியது. பின்னர் புஜ் நகரம் புதிய தலைநகராக விளங்கியது.

ஆட்சியாளர்கள்

கட்ச் இராச்சியத்தை இராசபுத்திர ஜடேஜா குலத்தின் சம்மா பிரிவினரால் ஆளப்பட்டது.[3]பிரித்தானிய இந்தியாவின் அரசில் கட்ச் இராஜ்ஜியம், ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட சுதேச சமஸ்தானமாக விளங்கியது.1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், கட்ச் இராச்சியம் மே, 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [4] [1][5] பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1918ல், கட்ச் இராச்சியத்தின் மன்னர்களுக்கு மகாராவ் பட்டம் வழங்கினர். [6]

முதலாம் கெங்கர்ஜி கட்ச் பகுதியின் கிழக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளை 1549ல் ஒரே இராச்சியமாக இணைத்தார்.[3] கெங்கர்ஜி தனது தலைநகரை புஜ் நகரத்திற்கு மாற்றியதுடன், மாண்டவி துறைமுக நகரையும் நிறுவினார்.

Thumb
இரண்டாம் பிரக்மல்ஜி கட்டிய பிராக் அரண்மனையின் அரசவை மண்டபம்
Thumb
1909ல் கட்ச் இராச்சியம், பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads

மக்கள் தொகையியல்

1901-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 45,630 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த கட்ச் இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகை 4,88,022 ஆகும்.[3]மொத்த மக்கள் தொகையில் 3 இலட்சம் இந்துக்களும், 1.10 இலட்சம் இசுலாமியர்களும், 70,000 சமணர்களும் இருந்தனர்.[3] கட்ச் இராச்சியத்தின் மக்கள் தொகையில் இராசபுத்திரர்கள் மற்றும் அந்தணர்கள் 9% ஆகவும், மற்ற இந்து சமூகத்தினர் 25% ஆகவும் இருந்தனர்.[3] குஜராத்தி மொழி அலுவல் மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருந்தது.[3]

Remove ads

நகரங்கள், துறைமுகங்கள்

கட்ச் இராச்சியம் புஜ், மாண்டவி, அஞ்சார், முந்திரா, நலியா, ஜாகவ், பாச்சாவ் மற்றும் ராப்பர் எட்டு நகரங்களும், 937 கிராமங்களும் கொண்டிருந்தது.[3] மேலும் துனா துறைமுகம், லக்பத் துறைமுக நகரம், லக்பத் கோட்டை நகரம், சந்தான், சிந்திரி, பாத்ரேசர் முதலியவைகள் கட்ச் கடற்கரை நகரங்கள் ஆகும்.

வணிகம், பொருளாதாரம்

கட்ச் மக்கள் வளைகுடா நாடுகளுடன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான, மஸ்கட், மொம்பசா, சிசிமா, ஜான்சிபர் போன்ற நாடுகளுடன் கடல் வணிகம் செய்து வந்தனர். கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திற்கு நன்கு அறியப்ப்பட்டவர் கட்ச் மக்கள். மூன்றாம் கெங்கரிஜி மன்னர் 1930ல் கண்ட்லா துறைமுகத்தை சீரமைத்தார். பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கு, 1900-1908ல், கட்ச் மன்னர் இரயில்வே சேவை தொடங்கினார். தொடருந்துகள் புஜ், அஞ்சார், பச்சாவ் நகரங்களை துனா துறைமுகத்துடன் இணைத்தது.

கட்ச் இராச்சியத்தில் கோதுமை, மக்காச்சோளம், பார்லி, சிறு தானியங்கள் பயிரிடப்பட்டது. கால்நடைகளை மேய்ப்பது பிற முக்கியத் தொழிலாகும்.[3]

Remove ads

ஆட்சியாளர்களும், தலைவர்களும்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads