கஜா மடா பல்கலைக்கழகம்

இந்தோனேசியாவின் யோகியாகர்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

கஜா மடா பல்கலைக்கழகம்
Remove ads

கஜா மடா பல்கலைக்கழகம் (இந்தோனேசியம்: Universitas Gadjah Mada; (UGM) என்பது இந்தோனேசியா, யோக்யகர்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இது 19 டிசம்பர் 1949-இல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.[3] இதன் முதல் விரிவுரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 13 மார்ச் 1946 இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தோனேசியாவில் உள்ள பழமையானதும் பெரியதுமான உயர் கல்வி நிறுவனம் ஆகும்.[4][5][6]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Thumb

18 பீடங்கள்[7] மற்றும் 27 ஆராய்ச்சி மையங்கள் [8] உள்ளடக்கியதான கட்ஜா மடா பல்கலைக்கழகத்தில் 68 இளமாணிப் பட்டங்களும் 23 பட்டயக் கற்கைகளும், 104 முதுமாணி மற்றும் சிறப்புப் பட்டங்களும்,43 முனைவர் ஆய்வு கற்கைகளும், சமூக அறிவியல் முதல் பொறியியல் வரை பல்வேறு பாடப்பிரிவுகளில் வழங்குகிறது. பல்கலைக்கழகம் ஏறத்தாழ 55,000 உள்ளூர் மாணவர்கள், 1,187 வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவதுடன் 2,500 பீட உறுப்பினர்களையும் கொண்டிள்ளது. பல்கலைக்கழகம் 360 ஏக்கர் (150 ஹெக்டேர்) நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன்[9] அரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.[10]

Remove ads

வரலாறு

கட்ஜா மடா பல்கலைக்கழகம் இந்தோனேசியாவின் முதல் அரச பல்கலைக்கழகமாகும். இது இந்தோனேசியா சுதந்திரத்தின் மூன்று வயது நிலையில் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குடியரசு கட்டுப்பாட்டை மீண்டும் விரும்பிய நெதர்லாந்து, இதனை அச்சுறுத்தல் செய்த சூழலில் இது நிறுவப்பட்டது. அப்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து யோகியகார்த்தாவுக்கு மாற்றமடைந்தது.[11]

நிறுவிய போது, இப்பல்கலைக் கழகத்தில் ஆறு பீடங்கள் இருந்தன: மருத்துவம், பற்சிகிச்சை, மற்றும் மருந்தாக்கவியல்; சட்டம், சமூக மற்றும் அரசறிவியல், பொறியியல்; இலக்கியம், கல்வித்துறை மற்றும் தத்துவம்; விவசாயம்; மற்றும் கால்நடை மருத்துவம்.

Remove ads

பல்கலைக்கழக துறைகள்

பல்கலைக்கழக நிர்வாகம் 18 துறைகளாக பல்வேறு பட்ட, பட்டப்பின் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது. ஒருங்கிணைந்த பட்டதாரிகள் பள்ளி இதற்கு மேலதிகமாக கற்கைகளை வழங்க தொழில் பயிற்சி பள்ளி தொழில்சார் கற்கைகளை வழங்குகின்றது.[12]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads