கட்டிடப் பொருள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக் காலத்தில், அரசர்களும், பெருந் தனவந்தர்களும் மட்டுமே தூர இடங்களிலிருந்து பொருட்களை எடுத்துவந்து கட்டிடங்களைக் கட்ட இயலும். பெரும்பான்மையான சாதாரண பொது மக்கள், தமது வாழிடங்களையும், பிற கட்டிடங்களையும் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிக் கொண்டார்கள். காட்டுமரக் கிளைகள், இலைகுழைகள், புற்கள், கற்கள், மண், விலங்குகளின் தோல், ஏன் பனிக் கட்டிகள் கூடக் கட்டிடப் பொருட்களாகப் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட பொருட்கள் மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே உபயோகத்திலிருந்தும், இன்றுவரை உலகின் பல பகுதிகளிலும் இவை உபயோகத்திலிருந்து வருகின்றன.[1][2][3]
Remove ads
முக்கியமான கட்டிடப் பொருள்கள்
மண்
சிறிய குடிசைகளை மட்டுமன்றிப் பெரும் நகரங்களையே கூட உருவாக்கிய பெருமை மண்ணுக்கு உண்டு. மண்ணால் கட்டப்படும் கட்டிடங்கள் நிரந்தரமானவையல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவினாலும், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்கள்கூட நிலைத்திருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பல நவீன கட்டிடப் பொருட்கள் போலன்றி, மண், புதுப்பிக்கப்படக்கூடியது. கட்டிடங்கள் அழிந்து போகும்போது மீண்டும் மண்ணுடனேயே கலந்துவிடக்கூடியது.
கல்
இயற்கையில் கிடைக்கும் பல்வேறு வகையான கற்கள் மிகப் பழங் காலத்திலிருந்தே கட்டடப் பொருளாகப் பயன்பட்டு வருகின்றது. சுண்ணாம்புக் கற்கள், மாபிள் கல், கருங்கல், மணற்கல் என்பவை இவற்றுள் முக்கியமானவை. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பிய கட்டிடங்கள் இவ்வாறான ஏதாவதொரு கல்லைப் பயன்படுத்தியே கட்டப்பட்டன.
மரம்
தூண்கள், உத்தரங்கள், கூரைக்கான சட்டகங்கள், கதவுகள், யன்னல்கள், தளம், அலங்காரத்துக்குரிய கட்டிடக் கூறுகள் எனப் பலவாறாகக் கட்டிடங்களில் மரம் பயன்படுகின்றது.உலகின் பல பாகங்களில் மரம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்து வந்தது. இது ஒரு புதுப்பிக்கப்படக்கூடிய கட்டடப்பொருளுமாகும். எனினும், கட்டிடம் கட்டுதல், தளபாட உற்பத்தி, விறகு போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாய விரிவாக்கம், நகராக்கம் என்பவற்றாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டமையால் மரம், பல நாடுகளில் ஒரு விலைகூடிய பொருளாக இருந்துவருகிறது. சுற்றுச் சூழல் காரணங்களுக்காகக் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கிலும், பலத் தேவைகளுக்காகவும் மரத்துக்குப் பதிலாக வேறு கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிலுள்ளன. ஆனாலும் மரம் இன்றும் ஒரு முக்கியமான கட்டிடப் பொருளே.
சுண்ணாம்பு
சீமெந்து
சீமைக்காரை அல்லது சீமெந்து என்பது மிக முக்கியமான கட்டுமான பொருளாகும் .இந்த சீமைக்காரையே கட்டுமானத்தின் அனைத்து வேலைப்பாடுகளிலும் முக்கியமானதாகும்
காங்கிறீற்று
இரும்பு
உருக்கு
கண்ணாடி
பிளாஸ்ட்டிக்கு
கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு
கண்ணாடியிழைக் காங்கிறீற்று
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads