கட்டுமரக்காரன்
பி. வாசு இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டுமரக்காரன் (Kattumarakaran) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கிய இப்படத்தில் பிரபு, புதுமுகம் ஈவா கிரோவர், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரைப்படப் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார். படம் 15 சனவரி 1995 அன்று வெளியானது. இப்படம் தெலுங்கில் சாகர் கன்யா என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2]
Remove ads
கதை
முத்தழகு ( பிரபு ) கட்டுமரத்தில் பணிபுரியும் ஒரு மீனவர். அவர் தன் முதலாளியிடம் ( ஆனந்த் ராஜ் ) பணிபுரிகிறார். ஒரு நாள், அவர் வைதேகி ( ஈவா கிரோவர் ) என்ற மர்மப் பெண்ணைக் காப்பாற்றுகிறார்.
நடிகர்கள்
- பிரபு - முத்தழகு
- அஞ்சலி - வைதேகி
- சங்கவி
- தேஜ் சப்ரு - இராஜ இராஜமாணிக்கம்
- ஆனந்தராஜ் - முத்தழகின் முதலாளி
- ஸ்ரீவித்யா - இராஜலட்சுமி
- நிழல்கள் ரவி - முத்தழகின் மைத்துனர்
- மா. நா. நம்பியார் - வைதேகியின் தாத்தா
- மோகன் ராமன் - செந்தில்நாதன்
- கசான் கான் - ஜானி
- சிவசந்திரன் - விஜயராகவன்
- செந்தில்
- ஆர். எஸ். சிவாஜி
- தியாகு
- வெங்கல் ராவ் - கால்நடை வளர்ப்பவர்
இசை
இப்படத்தின் பாடல்களுக்கான இசையை இளையராஜா அமைத்தார். 1995 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், வாலி எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[3] இப்படத்தில் பின்னணி இசையை மட்டும் தேவா அமைத்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads