கணித அறிவியல் நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

கணித அறிவியல் நிறுவனம்
Remove ads

கணித அறிவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences, Chennai) என்பது இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு கணித ஆராய்ச்சி மையமாகும்.[1][2] இது ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நிறுவனம் ஆகும்.[3]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

கணித அறிவியல் நிறுவனம், கணிதம், இயற்பியல் அறிவியலின் பல்வேறு முன்னணி துறைகளில் அடிப்படை ஆராய்ச்சிக்கான ஒரு தேசிய நிறுவனம் ஆகும். உ.ம். கோட்பாட்டு கணினி அறிவியல், கணிதம், கோட்பாட்டு இயற்பியல், கணக்கீட்டு உயிரியல். இந்நிறுவனம் அணுசக்தித் துறையால் முதன்மையாக நிதியளிக்கப்படுகிறது.[4] இந்த நிறுவனம் கப்ரு மீத்திறன் கணினியினை இயக்குகிறது.[5]

Remove ads

வரலாறு

கணித அறிவியல் நிறுவனம் ஆலடி இராமகிருஷ்ணனால் 1962இல் சென்னையில் நிறுவப்பட்டது.[6] இது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன், மேம்பாடு கல்வி நிறுவனத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1980களில் ஈ. சி. ஜி. சுதர்சனும், 1990களில் ஆர். இராமச்சந்திரனும் இயக்குநர்களாக இருந்தபோது இது சிறந்த விரிவாக்கத்தைப் பெற்றது. இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் வி. இரவீந்திரன் ஆவார்.[7]

கல்வி

இந்த நிறுவனம் ஒரு பட்டதாரி ஆராய்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் சேரும் ஆய்வு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முனைவர் பட்டத்தினைப் பெறுகின்றனர். முனைவர் பட்டத்திற்கு முனைவர் மேலாய்வு வசதியினையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் ஆராய்ச்சித் துறைகளில் வருகை தரும் விஞ்ஞானி திட்டமும் செயல்படுகிறது.[1]

வளாகம்

தமிழ்நாட்டின் தலைநகரில், தென் சென்னையில், அடையாறு-தரமணி பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனம், மத்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் உள்ளது.[7]இந்த நிறுவனம் மாணவர் விடுதி, நீண்ட கால ஆய்வாளர்கள், திருமணமான ஆய்வாளர்கள், முதுகலை பட்டதாரிகளுக்கான குடியிருப்புகள், விருந்தினர் அறைகளுடன் செயல்படுகிறது.[7] கணித அறிவியல் நிறுவனம், திருவான்மியூரில் கடற்கரைக்கு அருகில் ஆசிரியக் குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.[7]

குறிப்பிடத்தக்கவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads