கணித மாதிரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணித மாதிரி என்பது ஒரு முறைமையை விளக்குவதற்காகக் கணித மொழியைப் பயன்படுத்தும் ஒரு பண்பியல் மாதிரி (abstract model) ஆகும். கணித மாதிரிகள் சிறப்பாக, இயற்பியல், உயிரியல், மின்பொறியியல் போன்ற இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப் படுவதுடன், சமூக அறிவியல் துறைகளான, பொருளியல், சமூகவியல், அரசறிவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.[1][2][3]
1974 இல் எய்க்கோஃப் (Eykhoff) என்பார் கணித மாதிரி என்பது, இருக்கின்ற ஒரு முறைமையின் இன்றியமையாத அம்சங்களைக் குறிப்பதுடன், அம் முறைமை பற்றிய அறிவைப் பயன்படுத்தக்கூடிய வடிவில் தருகின்றதுமான ஒரு வடிவமாகும் என்று வரையறுத்தார்.
கணித மாதிரிகள், பல வடிவங்களில் அமையக் கூடும். இவ் வடிவங்கள், இயக்க முறைமைகள், புள்ளியியல் மாதிரிகள், வகையீட்டுச் சமன்பாடுகள் போன்ற வகையில் அமையக்கூடும். பல்வேறு பண்பியல் மாதிரிகளில், மேற்சொன்ன மாதிரிகளும், பிற மாதிரிகளும், கலந்து இருப்பதும் சாத்தியமே.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads