கணினியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.
வரலாறு



கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான எண்சட்டம் போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.[2]. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு சார்லச்சு சேவியர் தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக பயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.[3]
சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வடிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் வித்தியாசப் பொறியின் கண்டுபிடிப்பு அவருக்கு பகுப்புப் பொறி எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.[4]. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.[5] மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது[6].
1843 ஆம் ஆண்டு அடா லவ்லேஸ் வித்தியாசப் பொறியை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது பெர்னோளி என்கள் கணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.[7]
1885 ஆம் ஆண்டு வாக்கில் ஹெர்மன் ஹோலரித் என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்[8]. 1924ல் இவருடைய நிறுவணம் ஐபிஎம் நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வடிவமைத்து நூறு வருடம் கழித்து அவார்டு அயிக்கன் என்பவர் ஆர்வர்டு மார்க் I பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வடிவமைத்து காட்டினார்[9]. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.[10]
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இணையாக அழைக்கப்பெற்றது.[11]. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.[12][13] உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்பைப் பெற்றது.[14]
Remove ads
உயர்படி நிலைகள்
ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை அறிவியல் மற்றும் சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி (1750-1850 CE) மற்றும் விவசாயப் புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.
- தற்கால தகவல் காலம் மற்றும் இணையத்தை உள்ளடக்கிய எண்ணிமப் புரட்சி.
- நிரலாக்க மொழி ஒரு கருவியாக பல்வேறு மட்டங்களில் செயல்முறை தகவல்களை துல்லியமாக வெளியிடுவதற்காகவும் சுருக்கமாக பயன்படுத்தவும் வழிவகை உருவானது.[15]
- மறையீட்டியலில் எனிக்மா குறியீட்டை குறிவிலக்கு செய்தது இரண்டாம் உலக போரில் நேச நாடுகள் வெற்றி பெற ஒரு முக்கியமான காரணியாக இருந்தது[1]
- அறிவியல் கணிமை நடைமுறை செயல்முறைகள் மற்றும் பெரும் சிக்கலான சூழ்நிலைகளில் மதிப்பீடு, அத்துடன் பரிசோதனைகளை முற்றிலும் மென்பொருள் மூலம் செயல்படுத்த உதவியது.
- அறிவியல் கணிமை மூலம் மனம் தொடர்பான ஆய்வு மற்றும் மரபணுத்தொகுதி பகுப்பாய்வுக்கான முகப்புதல்களை செய்வதற்கு மனித மரபணுத்தொகைத் திட்டம் பயன்பட்டது..[16]
- படிமுறையியல் வர்த்தகம் பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், புள்ளியியல் மற்றும் எண் நுட்பங்களை பயன்படுத்தி நிதி சந்தைகளின் திறன் மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மையை அதிகரித்துள்ளது..[17]
Remove ads
தத்துவம்
கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள் கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.[18]பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது. .[19]
துறையின் பெயர்
"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஒரு கட்டுரையில் வெளிவந்தது. இதில் லூயிஸ் பெயின் 1921 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி போன்று கணினி அறிவியலுக்கென ஒரு பட்டதாரி பள்ளி உருவாக்க வாதிடுகிறார்.
தமிழ் சொற்கள்
- கணிப்பான் (calculator)
- பகுப்புப் பொறி (analytical engine)
- படிமுறைத் தீர்வு (algorithm)
- கணினி (computer)
- கணிமை (computing)
- படிமுறையியல் வர்த்தகம்(Algorithmic Trading)
கணினியியல் பிரிவுகள்
கணினியியல் கருத்தியல்
கருத்தியல் கணினி அறிவியலின் பரந்த துறையில் கணிமையில் பாரம்பரிய கோட்பாடு மற்றும் கணினியில் சுருக்கத்திற்கான தருக்கம், மற்றும் கணித அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளடக்கப்பட்டுள்ளது.
கணிமையின் கருத்தியல்
பீட்டர் ஜே டென்னிங் படி அடிப்படை கணினியியல் "எதனை (திறமையாக) தானியங்கிப்படுத்த முடியும்?" என்பதற்கான பதிலை தரவேண்டும்.
- கணிமை வரலாறு - computing history
- கணினி பொறியியல் - computer engineering
- கணினி கட்டுமானம் - Computer Architecture
- பதிகணினியியல் - Embedded Systems
- கணினி அறிவியல் - computer science
- நிரல் மொழிகள் - Computer Languages
- படிமுறைத் தீர்வு - Algorithms
- இடைமுக வடிவமைப்பியல் - (Human - Computer) Interface Design
- செயற்கை அறிவாண்மை - Artificial Intelligence
- கணினி வலையமைப்பியல் - Computer Networking
- இணையம் - internet
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads