கணையம்

From Wikipedia, the free encyclopedia

கணையம்
Remove ads

கணையம் (ஒலிப்பு) (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றன. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஓர் அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஓர் அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme) போன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.

மேலதிகத் தகவல்கள் கணையம், கிரேயின் ...
Remove ads

இழையவியல்

நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் இழையம் (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன [1] மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் குலை (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன.

மேலதிகத் தகவல்கள் கட்டமைப்பு, தோற்றம் ...
Remove ads

உசாத்துணை

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads