கண்டதேவி எஸ். அழகிரிசாமி

இசைக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia

கண்டதேவி எஸ். அழகிரிசாமி
Remove ads

கண்டதேவி சு. அழகிரிசாமி (Kandadevi S. Alagiriswamy, 21 ஏப்ரல் 1925 – 13 அக்டோபர் 2000) தமிழக வயலின் இசைக்கலைஞர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் கண்டதேவி சு. அழகிரிசாமி, பின்னணித் தகவல்கள் ...
Remove ads

இளமை வாழ்க்கை

இந்தியா, தமிழ் நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகருக்கு அண்மையில் உள்ள கண்டதேவி என்னும் ஊரில் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் திகதி சுந்தரராஜ ஐயங்கார், அலமேலு அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப இசைப்பயிற்சியை அவரது தாத்தாவான ஸ்ரீநிவாச ஐயங்காரிடமும், கண்டதேவி செல்லம் ஐயங்காரிடமும் பெற்றார். பின்னர் வயலின் இசைக்கலைஞர் டி. சௌடையா அவர்களிடம் மேலதிக பயிற்சி பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

மைசூரில் அவரது குரு டி. சௌடையாவின் வயலின் கச்சேரி நடைபெற்றபோது அவருடன் கூடவே வயலின் வாசித்தது இவரது அரங்கேற்ற நிகழ்ச்சியாக அமைந்தது.

அக்காலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, பி. எஸ். நாராயணசாமி, இன்னும் பலருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.

1982 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற இந்திய விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமி பாடியபோது அவருக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, யப்பான், சிங்கப்பூர், இலங்கை போன்ற பல நாடுகளில் .நடைபெற்ற இசைக் கச்சேரிகளில் இவர் வயலின் வாசித்துள்ளார்.[2]

Remove ads

விருதுகளும் பாராட்டுகளும்

இறப்பு

2000 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ந் திகதி சென்னையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 75.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads