சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகங்கை மாவட்டம் (Sivaganga district) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டம் 4,189 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. தலைநகர் சிவகங்கையாக இருந்தாலும் காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]
சிவகங்கை | |
மாவட்டம் | |
![]() காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் | |
![]() சிவகங்கை மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | சிவகங்கை |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
திருமதி. ஆஷா அஜீத் இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
மாநகராட்சிகள் | 1 |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 11 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
ஊராட்சிகள் | 445 |
வருவாய் கிராமங்கள் | 521 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 4,189 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
13,39,101 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
630 551 |
தொலைபேசிக் குறியீடு |
04565 |
வாகனப் பதிவு |
TN 63 |
பாலின விகிதம் |
ஆண்-49%/பெண்-51% ♂/♀ |
கல்வியறிவு |
79.85% |
இணையதளம் | sivaganga |
Remove ads
வரலாறு
சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது என்பது தகவல்கள் தெரிவிக்கின்றன இம்மாவட்டமானது மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என எம்ஜிஆர் முதல்வராக இருந்த போதும், அவருக்கு பின்பு தேவர் திருமகனார் மாவட்டம் என கருணாநிதியும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் என ஜெயலலிதாவும் என இவ்வாறு ஒரு மாவட்டத்திற்கு மூன்று முதல்வர்களும் பசும்பொன் தேவரின் பெயரையே திரும்ப திரும்ப மாற்றி வைத்தனர். பின்னர் கடைசியாக சிவகங்கை மாவட்டம் ஆனது.

Remove ads
நிர்வாகம்
மாவட்ட வருவாய் நிர்வாகம்
வருவாய் வட்டங்கள்
சிவகங்கை மாவட்டம், இரண்டு வருவாய் கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 39 உள்வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது.[1]
ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களையும்[2], 445 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[3] மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டது. அடுத்து நடுவன், மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில், கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களைப் பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள்[4] வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும். அத்திட்டங்களில் அதிக அளவு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் வருமாறு;-
- முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
- தாய் திட்டம்
- அம்மா பூங்கா
- அம்மா உடற்பயிற்சிக் கூடம்
உள்ளாட்சி நிர்வாகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி.மாநகராட்சி சிவகங்கை, மானாமதுரை, தேவக்கோட்டை என 3 நகராட்சிகளையும், 9 பேரூராட்சிகளையும் கொண்டது.[5]
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,339,101 ஆகும். அதில் ஆண்கள் 668,672 ஆகவும்; பெண்கள் 670,429 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.90% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்ந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 316 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.85 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,37,235 ஆகவுள்ளனர்.[7]
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 88.57% ஆகவும், கிறித்தவர்கள் 5.64% ஆகவும், இசுலாமியர்கள் 5.55 % ஆகவும், மற்றவர்கள் 0.24% ஆகவும் உள்ளனர்.
அரசியல்
இம்மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என 4 சட்டமன்றத் தொகுதிகளையும்; ஒரு சிவகங்கை மக்களவைத் தொகுதியும் உள்ளது.[8]
மக்களவைத் தொகுதி

சட்டமன்றத் தொகுதிகள்
Remove ads
எல்லைகள்
இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
வேளாண்மை
தமிழக அரசின் வேளாண் துறை தரவுகளில் இருந்து கீழ்கண்ட தரவுகள் உருவாக்கப்படுகின்றன.[9][10] அவை வருடா வருடம் மாறும் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நிலத்தின் அளவைகள்
சிவகங்கை மாவட்டத்தில் நில அளவை பணிகளை பொறுத்தமட்டில் புலப்படங்கள் கணிணிமயமாக்குதல்,[11] நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணிணிமயமாக்கல், கணிணிமயமாக்கப்பட்ட நில அளவை ஆவணங்களை பராமரித்தல் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் குறித்த பணிகள் நடைபெற்று கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக 1.11.2015 முதல் இன்றளவில் பட்டா மாறுதல் முழுப்புலம் மற்றும் உட்பிரிவு புலங்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறாமல் கூட்டுறவு சங்கங்கள் வட்ட அலுவலகங்களில் உள்ள இ-சேவை இதுபோன்ற பொது சேவை மையங்கள் மூலமாக மனுக்களை பெற்று இணைய வழியில் பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தின் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய 9 வட்டங்களும் 39 குறுவட்டங்களும் 521 வருவாய் கிராமங்களும் உள்ளது. மொத்தமுள்ள 9 வட்டங்களில் உள்ள 521 கிராமங்களில் புலப்படங்களை கணிணியில் வரைவு செய்யும் பணியில் மொத்தம் 521 கிராமங்களில் உள்ள மொத்த புலங்கள் 1,53,801ல் 1,47,556 புலப்படங்கள் கணினியில் வரைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 6245 புலப்படங்கள் வரைவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. மேலும், கணினிமயமாக்கப்பட்டுள்ள 1,47,556 புலங்களில் வட்ட அலுவலகங்களில் இணைய வழிப்படுத்துவதற்காக 1,42.025 புலங்கள் அங்கீகாரம் செய்யப்பட்டு மீதமுள்ள புலப்படங்கள் வட்ட அலுவலகங்களில் புலப்படங்கள் அங்கீகாரம் செய்யும் பணிகள் முடிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலப்படங்கள் கணிணிப்படுத்தல் பணிகள் முடிவுற்ற பிறகு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வேளாண் குடிமக்கள் எளிய முறையில் தங்கள் நில உடைமை ஆவணத்தினைப் பெற வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
Remove ads
செட்டிநாடு

செட்டிநாடு தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகும். இங்கு சமைக்கப்படும், செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும், நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும். செட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அவித்த முட்டை போன்றனவாகும்.
Remove ads
இம்மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சில

உலகின் முதல் தமிழ் தாய் கோவில் காரைக்குடி
- காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
- திரு இருதய ஆண்டவர் ஆலயம், இடைக்காட்டூர்
- காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில்
- மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
- குன்றக்குடி முருகன் கோயில்
- கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்
- திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்
- பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்
- நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில்
- இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்
- திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்
- பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில்
Remove ads
கல்வி நிறுவனங்கள்
பல்கலைக் கழகங்கள்
கல்லூரிகள்
- ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை, சிவகங்கை
- இதயா மகளிர் கல்லூரி, சருகணி, சிவகங்கை
- மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி , சிவகங்கை
- அரசு மகளிர் கலைக் கல்லூரி , சிவகங்கை
- டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி , இளையான்குடி.
- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, காரைக்குடி
- அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
- டாக்டர். உமையாள் இராமநாதன் கலை கல்லூரி, காரைக்குடி
- ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரி ,திருப்புத்தூர்
- சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவகோட்டை
ஆய்வகம்
குறிப்பிடத்தக்கவர்கள்
இம்மாவட்டத்தின் குறிப்பிட்டத்தக்கவர்களாக பின்வரும் நபர்களைச் சொல்லலாம்.
- இராஜ கண்ணப்பன்- முன்னாள் தமிழக பாெதுப்பணி மின்சாரம் நெடுஞ்சாலை அமைச்சர்
- பெரியகருப்பன்- தமிழக அமைச்சர்
- எச். ராஜா - பாஜக தேசியச் செயலாளர்
- கவிஞர் கண்ணதாசன் - புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்
- ப. சிதம்பரம் - முன்னாள் மத்திய நிதியமைச்சர்
- சீமான் - திரைப்பட இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
- தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் - தமிழறிஞர்
- மகேந்திரன் - திரைப்பட இயக்குநர்
- அழகப்ப செட்டியார் - கொடை வள்ளல்
- ஆவிச்சி மெய்யப்பன் - திரைப்படத் தயாரிப்பாளர்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads