கண்டாங்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்டாங்கி (Kandangi) என்பது 250 ஆண்டுகள் [1]பழைமையான பருத்தி நூலினால் நெய்யப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த சேலையாகும். செட்டிநாடு கண்டாங்கி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காரைக்குடியினை ஆதாரமாகக் கொண்டதாகும். [2]

இந்த ரகச் சேலைகள் இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், நகரத்தார் மூலம், பல நாடுகளில் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 அங்குலம் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது.

காரைக்குடி பகுதியில் இப்போது, உற்பத்தி செய்யப்படும் 60 எஸ்.சி., X 60 எஸ்.சி., ரக சேலைகளை ஆய்வு செய்த, என்.ஐ.எப்.டி., பேராசிரியர்கள், அவை கண்டாங்கி சேலையின் திரிபு என கூறுகின்றனர். 1920 ஆம் ஆண்டு நெய்யப்பட்ட, 40எஸ் X 40எஸ் எண் நூல் ரகம் கொண்டு நெய்யப்பட்ட சேலையை வைத்து செய்த ஆய்வில் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads