காரைக்குடி

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு நிலை நகராட்சி From Wikipedia, the free encyclopedia

காரைக்குடிmap
Remove ads

காரைக்குடி (ஆங்கிலம்: Karaikudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய மாநகரம் மற்றும் காரைக்குடி மாநகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Thumb
Busy Commercial Road in Karaikudi During Festival

இது சிவகங்கை மாவட்டத்தின்‌‌ முதல் மாநகராட்சி ஆகும் .[4] இம்மாநகரம், "செட்டி‌நாடு" என்றும் "கல்வி நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி மாநகராட்சி தமிழ்நாடு அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) இங்கு அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி கண்டாங்கிச் சேலைக்குப் புவிசார் குறியீடு தரப்பட்டு உள்ளது.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி உட்பட்டுள்ளது. இம்மாநகரானது 96.05சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கிய காரைக்குடி மாநகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2022-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 2,34,523 ஆகும். போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டைச் சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் இரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன. காரைக்குடி மாநகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.07°N 78.78°E / 10.07; 78.78 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் காரைக்குடியில் 2022 நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 234523 உள்ளது.[6] இந்திய மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Remove ads

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

காரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார்.

திருமயம், திருப்பத்தூர், காரைக்குடிமாநகராட்சி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் நாடாளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.

காரைக்குடி மாநகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. மாநகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன.

Remove ads

புகழ்பெற்றவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads