கண்டிய நடனம்

From Wikipedia, the free encyclopedia

கண்டிய நடனம்
Remove ads

கண்டிய நடனம் (Kandyan dance) சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். இது பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16-19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தின் இந்து புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின், நடத்தைகள் ஆடப்படுகின்றது. கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும். கண்டி நடனமாடுபவர்கள் தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியும், உடலெங்கும் பலவிதமான நகைகள் அணிந்திருப்பர்.[1][2]

Thumb
கண்டிய நடனக் கலைஞர்கள்
Thumb
கண்டிய நடனக்காரர்
Remove ads

கண்டிய நடன வரலாறு

செவிவழிக் கதைகளின்படி, கண்டி நடனம் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்த மந்திரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கிலிருந்து தோன்றியது ஆகும். இலங்கை அரசன் ஒருவனுடைய கனவில் சிறுத்தை ஒன்று அடிக்கடி வரலாயிற்று. சிங்களவர்களின் முதல்வன் எனக் கருதப்படும் முதல் மனைவியாகிய குவேனி என்பவள் வைத்த சூனியம் காரணமாக ஏற்பட்ட ஒரு நோய் இது எனக் கருதப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக இம் மந்திரவாதிகளை இலங்கை அரசன் இலங்கைக்கு அழைப்பித்தான். கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கு செய்த பின்னர் அரசன் இந் நோயிலிருந்து மீண்டான். இதைத் தொடர்ந்து பல இலங்கையர் இந்தச் சடங்கை நிகழ்த்தலாயினர்.

பிற்காலத்தில் சிங்கள நிலவுடைமை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களே இந் நடனத்தை ஆடினர். ஆண்கள் மட்டுமே இந் நடனத்தை ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். புத்தர் பற்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்த இச் சாதியினர் அக்கோயிலில் நிகழும் தலதா பெரகரா என அழைக்கப்படும் ஊர்வலத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். கண்டி அரசர்களின் காலத்தில் இந்த நடனம் அரசின் ஆதரவுடன் வளர்ந்தது. கண்டி அரசு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த நடனம் செல்வாக்கு இழந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்நடனம் புத்துயிர் பெற்றுள்ளதுடன் மேடைகளில் ஆடத்தக்க வகையில் வளர்ச்சியும் அடைந்துள்ளது. இலங்கையின் பண்பாட்டு அடையாளமாகவும் இது இன்று விளங்கிவருகிறது.

Remove ads

உடை

Thumb
கண்டி நடனத்துக்கு மத்தளம் வாசிப்பவர்

கண்டி நடனக் கலைஞர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய உடைகளை அணிந்து ஆடுவர். இது "வெஸ் உடை" எனப்படுகிறது. ஆண்கள் தலைப்பாகை அணிவதுடன், மேற்சட்டை எதுவும் அணியாமல், மணிகளால் இழைத்து வலைபோல் செய்யப்பட்ட மார்பணி ஒன்றை அணிவர். தலைப்பாகையின் முன்புறம் உலோகத்தால் ஆன அமைப்பைக் கொண்டது. இடுப்புக்குக் கீழ் கணுக்கால் வரை நீண்ட உடை அணிவர். இடுப்பில் ஒட்டியாணம் போல் அமைந்த இடுப்புப் பட்டியின் முன்புறம் முக்கோண வடிவில் அமைந்து முழங்காலுக்குச் சற்று மேல் வரை நீண்டிருக்கும். இவற்றைவிட கைகளில் தோள்பட்டைக்குக் கீழ் மேற்கையிலும், முழங்கைகளுக்குச் சற்றுக் கீழும் அணிகள் அணிந்திருப்பர். காலில் சலங்கையும் அணிவது உண்டு. கண்டி நடனக் கலைஞர் முதன் முதலாகத் தலை அணி அணிவது ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது. இது "வெஸ் மாங்கல்யம்" என அழைக்கப்படுகிறது.

Remove ads

இசை

கண்டி நடனத்தைத் தாளக் கருவிகளுடன் ஆடுவதே மரபு. "கெத்த பெர" எனப்படும் ஒருவகை மத்தளம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டி நடனத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். இந்த மத்தளம் வாசிப்பவரும் இதற்கென உள்ள சிறப்பு உடைகளுடன் நடனக் கலைஞருக்கு அருகில் நின்று வாசிப்பார். "தாளம்பொத்த" எனப்படும் சல்லாரியையும் பயன்படுத்துவர். சிலவகைக் கண்டி நடனங்களில் பாடல்களுடன் கூடிய இசையும் பயன்படுகின்றது.

கண்டிய நடனத்தின் இன்றைய நிலை

முற்காலத்தில் பெண்கள் கண்டி நடனங்களில் இடம்பெறுவதில்லை. தற்போது பெண்களும் இந் நடனங்களை ஆடுவதற்குப் பயில்கின்றனர். எனினும் பெண்களுக்கு என அமைந்த "வெஸ் உடை" கிடையாது. எனவே ஆண்களுக்கான உடைகளில் வெவ்வேறு வகையான மாற்றங்களைச் செய்து பெண்கள் உடுத்துகின்றனர்.

1970 களில் சித்திரசேன டயஸ் என்பவர் கண்டிய நடனத்தை மேடைகளில் ஆடுவதற்கு ஏற்றவாறு அமைத்தார். தான் உருவாக்கிய மேடை நடன நிகழ்ச்சிகளில் கண்டிய நடன அசைவுகளையும் அம்சங்களையும் பயன்படுத்தினார். இவரது புகழும், இந்த நடனம் தொடர்பாக இருந்துவந்த சாதித் தடைகளை உடைப்பதற்கு உதவியதுடன், கண்டிய நடனத்தை நகர்ப்புற மக்களும், தற்காலத்துச் சுவைஞர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் ஆக்கியது. இன்றுவரை இலங்கையில் கண்டி நடனத்தைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கும் பள்ளிகளில் பெரியது சித்திரசேன நடனப் பள்ளியே.

Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads