சிங்களவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிங்களவர் (Sinhalese, සිංහල ජාතිය) (தமிழில் சிங்களர் என்று கூறப்படுவது உண்டு) இலங்கையின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

கி.மு. 5-ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காள தேசம் அதாவது இன்றைய பங்களாதேஷ் மற்றும் ஒரிசாவிலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டியநாட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் இனக்கலப்புகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.[12] இவர்கள் பொதுவாக, காக்கேசிய இனக்குழுவை சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும் அயலிலுள்ள திராவிடர்களுடைய அடையாளங்களும் இவர்களிடம் காணப்படுகின்றன.

Remove ads

சிங்களவர் சமயம்

பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] சிங்களவரின் சமய அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் சிங்களவர் சமயம் குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத பெளத்த சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பௌத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. பண்டாரநாயக்கா (முருகன்), பத்தினி (கண்ணகி) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.

Remove ads

சிங்கள நாகரிகம்

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்த, சிறிய இனமாக இருந்த பொழுதிலும், பழங் காலத்தில் இவர்கள் கட்டியெழுப்பிய நாகரிகம் வியக்கத்தக்கதாகும். உலர் வலயங்களான இலங்கையின் வடமத்திய பகுதிகளில், கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பத்தை அண்டிய காலப்பகுதிகளிலேயே, அவர்களல் கட்டப்பட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், அக்காலத்தில் அவர்களுடைய தொழில்நுட்ப வல்லமைக்குச் சான்றாகும். மேலும் அனுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களிலுள்ள இடிபாடுகளினால் அறியப்படும், அக்கால நகர அமைப்புகளும், பௌத்தவிகாரங்களும், அக்காலக் கட்டிடக்கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Remove ads

சிங்களவர் தமிழர் உறவு

சிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே இலங்கை இனப்பிரச்சினை உருவானதெனலாம்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads