கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்பது என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 1 ஏப்ரல் 2019 முதல் 31 சூலை 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் கிருஷ்ண பிரியா, விஷ்ணு உன்னிகிருஷ்ண, சீமா, அனு ஆகியோர் நடித்துள்ளார். இத்தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக 31 சூலை 2020 அன்று 258 அத்தியாயங்களுடன் முடிவடைந்தது.[1]
Remove ads
கதை சுருக்கம்
பிரீத்தி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள், விக்ரம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் இவர்கள் சேர்ந்தால் விக்ரம் குடும்பத்தின் சாபத்தின் படி விக்ரம் இறந்து விடுவான். சாபத்தை மீறி இவர்கள் எப்படி வாழ்வில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
- அனு - கிருபா
- அன்பழகன் - ராம்கி
- அமிர்தா வர்மன் - சந்திரிகா
- சரவணன் - வீரபாகு
- பிரேமலதா - விக்ரமின் அத்தை
- மது மோஹன் - விக்ரமின் மாமா
- மதுமிதா - ஸ்ரீஜா
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் புதுமுக நடிகை கிருஷ்ணா பிரியா, பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக டிக் டாக், சரவணன் மீனாட்சி (பகுதி 3), அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்த விஷ்ணு உண்ணிகிருஷ்ணன், விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபல நடிகை சீமா, அன்பழகன், அமிர்தா வர்மன் போன்ற பலர் நடித்துள்ளனர்.[4][5]
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 1, 2019 முதல் சூலை 5, 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. சூலை 8, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பூவே பூச்சூடவா என்ற தொடர் ஒளிபரப்பானது. அதன் பிறகு நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி முடிவடைந்தது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
