நாடகத் தொடர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒரு கதை, திரைவடிவம் பெற்றுத் தொடர்கதை போல, தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது நாடகத் தொடர் (Soap Opera) என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.

1950 ஆம் ஆண்டில் இருந்து பிபிசி வானொலியில் தி ஆர்ச்சர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது, உலகின் மிக நீண்ட வருடம் ஓடிய வானொலி தொடர் இதுவாகும்.[1] உலகின் மிக நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமை கோரோனேசன் ஸ்ட்ரீட் என்ற ஆங்கில தொடருக்கே சேரும். இந்த தொடர் 1960ஆம் ஆண்டு முதல் ஐ டிவியில் ஒளிபரப்பாகிறது.[2]

Remove ads

தோற்றம்

முதல் முதலில் 1930ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள வ்கின் (WGN) என்ற வானொலியில் தான் முதல் தொடரான வர்ணம் பூசப்பட்ட கனவுகள் (Painted Dreams) என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது.[3] இந்த தொடர் கிழமை நாட்களில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது.

தமிழர்களின் தொடர்கள் முதலில் மேடை நாடகமாய் தான் தோற்றம் பெற்றது. 1970-1980 பிறகுதான் வானொலி தொடர்கள் அல்லது 1990 பிறகுதான் தொலைக்காட்சித் தொடர்கள் தோற்றம் பெற்று இருக்கு என அறியப்படுகிறது.

Remove ads

கதை

ஆரம்ப காலத்தில் தொடரின் கதைகள் வாரத்திற்கு ஒரு கதை என்ற வடிவிலே ஒளிபரப்பப்படது. தற்காலத்தில் வாரத்தில் 2 நாட்கள் என்ற அடிப்படையில் மேற்கத்திய தொடர்கள் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் அடிப்படையில் ஒளிபரப்பப்படுகின்றது. கதைகள் குடும்பம், காதல், காவல், பழிவாங்குதல், அதிரடி, மர்மம் போன்ற வடிவில் எழுதி ஒளிபரப்பாகிறது. எல்லா கதைகளும் முதன்மை கதாபாத்திரத்தையே சுற்றி அமைத்திருக்கும்.

தயாரிப்பு

ராடான் மீடியா, கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு, டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன. ஒரு மொழியில் தயாரித்த தொடர்களை வேறு மொழியில் அதே நிறுவனம் தயாரிக்கும் வழக்கம் தமிழ் தயாரிப்பு நிறுவங்களிடம் உண்டு.

  • உதாரணம்:
    • திருமதி செல்வம் - (தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்) விகடன் டெலிவிஸ்டாஸ்
    • கோலங்கள் - (கன்னடம்) விகடன் டெலிவிஸ்டாஸ்
    • சித்தி - (மலையாளம், கன்னடம்) ராடான் மீடியா
    • அரசி - (கன்னடம்) ராடான் மீடியா

தமிழ் மொழியில்

ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.

இந்தியாவில்

இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதைகள் குடும்பத்தையே மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது. ஒரு மொழியில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட தொடரின் கதையை வாங்கி வேறு மொழியில் மறுதயாரிப்பு செய்து ஒளிபரப்பாகும் வழக்கம் இந்திய தொடர்களில் உண்டு.

  • உதாரணம்:
    • திருமதி செல்வம் - (தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம்)
    • கோலங்கள் - (கன்னடம், இந்தி)
    • சித்தி - (மலையாளம், இந்தி, கன்னடம்)
    • கிருஷ்ணதாசி - (இந்தி)
    • இதயம் - (இந்தி)
    • தங்கம் - (தெலுங்கு, கன்னடம்)
    • தென்றல் - (தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
Remove ads

இலங்கையில்

சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, நேத்ரா தொலைக்காட்சி போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இவைகளின் பெரும்பாலுமான தொடர்கள் தமிழ்நாட்டில் ஒளிபரப்பான தொடர்களை வாங்கி ஒளிபரப்புகின்றனர்.

மொழி மாற்றம்

ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. தமிழ் தொடர்கள் தெலுங்கு, மலையாளம் மற்றும் சிங்களம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பும் வழக்கம் உண்டு.

2013-2017ஆம் ஆண்டு வரை இந்தி தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. சின்னத்திரை நட்சத்திரங்களின் எதிர்ப்பின் விளைவால் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தொடர்களின் ஆதிக்கம் குறைத்துள்ளது. சில தொலைக்காட்சியில் புராதான தொடர்களை இந்தியில் இருந்து தமிழ் தெலுங்கும், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.

கொரியன் தொடர்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Remove ads

விருதுகள்

சன் குடும்பம் விருதுகள், விஜய் தொலைக்காட்சி விருதுகள், ஜீ குடும்ப விருதுகள், இந்திய டெலி விருதுகள், இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள், ஜீ ரிஷ்தே விருதுகள், ஜீ தங்க விருதுகள், புதிய திறமை விருதுகள், எவ். ஐ. சி. சி. ஐ. விருது, தி குளோபல் இந்திய பிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ், பிக் டெலிவிசன் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads