கண்ணபுரம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்
தமிழ்நாட்டின் கண்ணபுரத்தில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில் கொங்கு நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில். திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
Remove ads
கண்ணபுரம்
கண்ணபுரம், காங்கேய நாட்டின் பதினான்கு பழம்பதிகளில் பதினொன்றாவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கண்ணபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பிரபலமான மாரியம்மன் திருக்கோயில்.[1]
கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் தேவ ஸ்தானகைபீது
கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் தேவ ஸ்தானகைபீது கிழக்கிந்திய கம்பெனியாட்சியில் முதல் சர்வேயர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்ற கர்னல் மெக்கன்சி எழுதிய ஒன்று. இது தயாரிக்கப்பட்ட தேதி 26.07.1807. தமிழக அரசின் தொல்லியல் துறையால் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது.[1]
மெக்கன்சி ஆவணத்திலிருந்து தெரியவந்த தகவல்கள்:
- கண்ணர்பாடி எனும் கன்னிவாடியிலிருந்து வந்த கொங்கு வேளாளர் கண்ணபுரம் ஊரை நிர்மாணித்ததாகக் ’கன்னிவாடிபட்டயம்’ குறிப்பிடுகிறது.
- பாண்டவர்கள் வனவாசம் முடிந்து இலாடபுரம் எனும் தாராபுரத்தில் ஒருவருடம் மறைந்து வாழ்ந்த போது அவர்களைக் காண கண்ணபிரான் வந்த வழியில் வழிபட்ட தலம். எனவே கண்ணபுரம் எனப்பெயர் பெற்றது.
மேலும் பல தகவல்கள் 26.07.1807 அன்று எழுதப்பட்ட மெக்கன்சி ஆவணத்திலிருந்து தெரிய வருகின்றன.
Remove ads
தல வரலாறு
விக்கிரமச் சோழர் தன் பிரம்மஹத்தி தோசம் நீங்க இத்தலத்தை அமைத்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து ஊரையும் அமைத்து அதற்கு விக்கிரம சோழபுரம் எனப் பெயரிட்டதாகத் தலவரலாறு கூறுகின்றது.
அருணகிரிநாதர் மூன்றுமுறை இத்தலத்திற்கு வந்து திருப்புகழ் பாடியுள்ளார்.
அகத்திய முனிவருக்கு இறைவனார் தமது திருக்கல்யாணக் கோலம் காட்டியருளிய திருத்தலம்.
முதலாம் விக்கிரம சோழனாகிய கலிமூர்க்க விக்கிரம சோழர் கட்டிய திருக்கோயில்.
Remove ads
கல்வெட்டுகள்
அபிமான சோழ ராசாதிராசன், வீர ராசேந்திர சோழன், விக்கிரம சோழன் ஆகிய மன்னர்களின் ஏழு கல்வெட்டுகள் உள்ளன. சிறப்பான சிற்பக்கலைத் திறன் கொண்ட திருக்கோயில்.
பட்டுநூல் விற்பனையாளர்களின் சிவத்தொண்டு
தாமிர சாசனம் மூலம் இத்திருக்கோயிலின் அபிஷேகம் நைவேத்தியம் போன்ற செலவுகளுக்காகப் பல தேசங்களுக்குச் சென்று பட்டுநூல் வியாபாரம் செய்து வந்த தராசுரம் பட்டுநூல்காரர் பலர் சேர்ந்த அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது தெரிய வருகின்றது.[2]
சிதிலமடைந்த இத்திருக்கோயிலின் புனர்நிர்மாணப்பணிகள் 2012 ஆம் வருடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads