கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணம்மா ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:01 க்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு குடும்ப பின்னணியை தழுவிய மெகா தொடர் ஆகும். இந்த தொடரை ஜெனி என்பவர் இயக்க, அர்ச்சனா, சியாம், நிவிஷா, அரவிந்தராஜ், மணி, சாய் மாதவி, புவி ராஜ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2]இந்த தொடர் சில காரணங்களால் 69 அத்தியாங்களுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
Remove ads
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை கண்ணம்மா தன் குடும்ப சூழல் மற்றும் தன் அப்பாவின் கோபம் இரண்டின் காரணமாகவும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு ஒரு டெய்லராக ஒரு ஃபேஷன் கார்மென்ட்ஸில் வேலை செய்கிறாள். அரவிந்த் அந்த நிறுவனத்தின் முதலாளி ஆரம்பத்தில் இருந்து அரவிந்துக்கும் கண்ணம்மாவுக்கும் ஒருவர் மீது ஒருவரை பிடிக்கவில்லை. கண்ணம்மாவை தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்ததே அவளை பழி வாங்குவதற்குத்தான்.
இந்நிலையில் கண்ணம்மாவே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவளது முதலாளியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டி அவரையே திருமணம் செய்ய வேண்டியதாகிறது. கண்ணம்மா அவளது கணவனின் மனதையும், தனக்கு எதிர்பாராமல் அமைந்த இந்த வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே இந்த தொடரின் கதை.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- அர்ச்சனா - கண்ணம்மா
- சியாம் - அரவிந்
- நிவிஷா - மீரா
துணை கதாபாத்திரம்
- ஆர். ஸ்டெஃபி
- ஆர். அரவிந்தராஜ்
- ஜெயா ராஜகோபால்
- மோனிகா
- வசந்தி
- சைத்ரா
- சரண்யா
- அமுதா
- மணி
- சாய் மாதவி
- புவி ராஜ்
முகப்பு பாடல்
இந்த தொடருக்கான முகப்பு பாடலான ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்ற பாடலுக்கு இளைய கம்பன் பாடல் வரிகள் எழுதியுள்ளார், விஜய் சரவணா இசை அமைக்க, பாடகி சரண்யா சீனிவாசன் இந்த பாடலை பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads