சியாம் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியாம் (10 நவம்பர் 1989) என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு முதல் புதுக்கவிதை, பொன்னூஞ்சல் (2016), லட்சுமி கல்யாணம் (2017), கண்ணம்மா (2018), ஈரமான ரோஜாவே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.
Remove ads
நடிப்புத் துறை
இவர் 2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 பகுதி 8 என்ற நடன போட்டி நிகழ்ச்சி, சரவணன் மீனாட்சி 2, களத்து வீடு போன்ற தொடர்களில் கதாபாத்திர நடிகராக நடித்துள்ளார். 2016 இல் சன் தொலைக்காட்சியில் பொன்னூஞ்சல் என்ற தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே ஆண்டில் அச்சம் என்பது மடமையடா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவரே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டில் முதல் முறையாக இரண்டாவது முன்னணி கதாநாயகனாக லட்சுமி கல்யாணம் என்ற தொடரில் அஜய் என்ற கதாபாத்திரத்தில் அஸ்வின் குமார், தீபிகா, சத்யா சாய், யுவராணி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2018 இல் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்திலும், ஜெயா தொலைக்காட்சியில் இரண்டாவது முன்னணி கதாநாயகனாக கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடரிலும் நடித்துள்ளார். இதே ஆண்டில் ராஜ் தொலைக்காட்சியில் கண்ணம்மா என்ற தொடரில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார். அந்த தொடர் பெரிய அளவு வெற்றி பெறாத காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது.
2019 இல் என்ற தொடரில் ஈரமான ரோஜாவே என்ற கதாபாத்திரத்தில் கயாத்திரிக்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்த தொடரில் இவர்களின் நடிப்பு பலரால் கவரப்பட்டது. அரண்மனை கிளி என்ற தொடரிலும் செல்வம் என்ற பாத்திரத்தில் நடிக்கின்றார்.
Remove ads
தொடர்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads