கண்ணாத்தாள்

பாரதி கண்ணன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்ணாத்தாள் 1998 ஆம் ஆண்டு கரண் மற்றும் நீனா நடிப்பில், இளையராஜா இசையில், பாரதி கண்ணன் இயக்கத்தில், ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]

விரைவான உண்மைகள் கண்ணாத்தாள், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

கண்ணாத்தாள் (நீனா) தெய்வபக்தி நிறைந்தவள். அந்த கிராமத்து மக்கள் அவளை தெய்வமாகவே போற்றுகின்றனர். நாதஸ்வரக் கலைஞரான அவளது தந்தை சண்முகம் பிள்ளை (டெல்லி கணேஷ்), தாய் (பாத்திமா பாபு) மற்றும் நான்கு சகோதரிகளுடன் வசிக்கிறாள்.

ஜமீன்தார் மோகனசுந்தரத்தின் (மணிவண்ணன்) மனைவி ரங்கநாயகி (வடிவுக்கரசி). இவர்களின் மகன் சின்னதுரை (கரண்). பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவன் சின்னதுரை. கோயில் திருவிழாவில் கண்ணாத்தாவைக் காணும் அவன் அவளைத் திருமணம் செய்ய விருப்பப்படுகிறான். சண்முகம் பிள்ளையின் சம்மதத்தோடு அவர்கள் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்குப் பிறகு அப்பாவியான கண்ணாத்தாளைக் கொடுமைப்படுத்துகிறான் சின்னதுரை. தன் மகளைக் காண வரும் சண்முகம் பிள்ளை, கண்ணாத்தாள் படும் சிரமங்களைக் கண்டு மனவேதனை அடைகிறார். அந்தக் கவலையிலேயே மாரடைப்பு வந்து இறக்கிறார். ஆதரவற்ற தன் தாயையும் சகோதரிகளையும் தன் வீட்டில் தங்கவைக்கிறாள் கண்ணாத்தாள். சின்னதுரையின் தாயும் தந்தையும் அவர்களை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இவர்களின் கொடுமை தாளாமல் கண்ணாத்தாளின் தாயும், சகோதரிகளும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

சின்னதுரையும் அவன் தாய், தந்தையும் சேர்ந்து கர்ப்பிணியான கண்ணத்தாளைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்துவிட்டு அதை விபத்தாக சித்தரிக்கின்றனர். அதன் பிறகு சின்னதுரை, சீதாலட்சுமியை (இந்து) திருமணம் செய்கிறான். கண்ணாத்தாள் தெய்வமாக வந்து சின்னதுரை மற்றும் அவன் தாய், தந்தையை பழிதீர்க்கிறாள்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

இசை

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் காமகோடியன், பொன்னடியான், அறிவுமதி, இளையராஜா மற்றும் பாரதிகண்ணன்[4][5].

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads