கதம்பர் வம்சம்

பண்டைய இந்தியாவின் அரச குலங்களில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia

கதம்பர் வம்சம்
Remove ads

கடம்பர் வம்சம் (Kadamba dynasty) (345 - 525 கி.பி) நவீன கருநாடகாவின் வட கன்னட மாவட்டத்தின் வனவாசியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அரச குலமாகும். இந்த இராச்சியம் மயூரசர்மாவால் கி.பி 345 இல் நிறுவப்பட்டது. மேலும் பிற்காலத்தில் தனது ஏகாதிபத்தியத்தின் மூலம் வளரும் திறனைக் காட்டியது. இவர்கள் கருநாடகத்தின் பேரரசுகளான சாளுக்கியர், இராஷ்டிரகூடர் போன்றவர்களின் படைத் துணையோடு தற்போதைய கோவா, கங்கல் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் கன்னடம் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. தமிழ் மொழியிலிருந்து கன்னடம் ஒரு தனி மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள். கதம்பர் வம்சத்தை முதன்முதலில் 345ஆம் ஆண்டு தோற்றியவர் மயூரசர்மா ஆவார்.

விரைவான உண்மைகள் பனவாசியின் கதம்பர்கள்கதம்பர்கள் ಬನವಾಸಿ ಕದಂಬರು, நிலை ...
மேலதிகத் தகவல்கள் கதம்பர்கள் ...

கதம்பர்கள் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிறுவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டவையாகும். வனவாசியில் அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

Remove ads

கதம்பர்களின் முன்னோர்

கதம்பர்களின் முன்னோர் சங்ககாலத் தமிழகத்தைச் சேர்ந்த கடம்பர்களான இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

Thumb
மதுகேசுவரர் ஆலயம், பனவாசி
Thumb
மதுகேசுவரர் ஆலயம், பனவாசி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads