மயூரசர்மா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயூரசர்மா (Mayurasharma) மயூரவர்மன் எனவும் அறியப்படும் இவர் இந்தியாவின் கருநாடகாவிலுள்ள பனவாசியை தலைநகராகக் கொண்டு கதம்பர் வம்சத்தை நிறுவினார். தலகுந்தா (நவீன சிமோகா மாவட்டம்) பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு கன்னட அறிஞருமாவார். பொ.ஊ. 345–365 வரை இவரது ஆட்சிக் காலம் இருந்தது.[1][2] கதம்பர்களின் எழுச்சிக்கு முன்னர், நிலங்களை ஆளும் அதிகார மையங்கள் கர்நாடகாவிற்கு வெளியே இருந்தன. ஆகவே, கதம்பர்கள் சொந்த மண்ணின் மொழியான கன்னடத்துடன் சுயாதீன புவி-அரசியல் அமைப்பாக அதிகாரத்திற்கு வந்தது ஒரு முக்கிய முக்கிய நிகழ்வு ஆகும். இதன் காரணமாக நவீன கர்நாடக வரலாற்றில் மயூரசர்மா ஒரு முக்கியமான வரலாற்று நபராக ஆனார். ஆரம்பகால கன்னட மொழி கல்வெட்டுகள் இவர்களைப் பற்றி பனவாசியின் கதம்பர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.[3]

விரைவான உண்மைகள் மயூரசர்மா, கதம்ப வம்சத்தை நிறுவியவர் ...
Remove ads

ஆரம்ப காலம்

புராணக்கதை

Thumb
சுமார் பொ.ஊ. 455, தலகுண்டா தூண் கல்வெட்டு மயூரசர்மாவின் வாழ்க்கையைப் பற்றியும், கதம்ப வம்சத்தைப் பற்றிய தவல்களையும் வழங்குகிறது

கதம்பர்களைப் பற்றி விவரிக்கும் பல புராணங்களும் கதைகளும் உள்ளன. சிவனின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டுகள் கடம்ப மரத்தின் வேர்களில் விழுந்ததாகவும் அதிலிருந்து மூன்று கண்கள் கொண்ட, நான்கு ஆயுதங்களைக் கொண்ட திரிலோச்சனா கதம்பர் என்பவர் வந்ததாகவும் ஒரு புராணக்கதை கூறுகிறது. மயூரசர்மன் உருத்திரனுக்கும் பூமித் தாய்க்கும் ஒரு கடம்ப மரத்தின் கீழ் நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்தார் என்று மற்றொரு புராணக்கதை கூறுகிறது. மற்றொரு கதையின் படி, மயூரசர்மா ஒரு சைனத் துறவியின் சகோதரிக்கு கடம்ப மரத்தின் கீழ் பிறந்தார் என்றும் கூறுகிறது. எவ்வாராயினும், இராச்சியத்தை நிறுவிய ஆட்சியாளர்களை பகுதி-கடவுளாக முன்வைக்கும் வகையில் இந்த புராணக்கதைகள் அனைத்தும் உருவாகின என்று தெரிகிறது.[4]

கல்வெட்டு ஆதாரங்கள்

தலகுந்தாவில் கண்டெடுக்கப்பட்ட 450வது கல்வெட்டுகளில் மயூரசர்மாவின் குடும்பத்தைப் பற்றியும் அரசின் தோற்றம் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளது மிகவும் நம்பகமான ஆதாரங்களாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகளில் புராணக்கதைகள் இல்லாதது என்றும் அறியப்படுகிறது. இது கதம்ப வம்சத்தைப் பற்றிய யதார்த்தமான மற்றும் உண்மையான கணக்கை அளிக்கிறது.[5] கல்வெட்டின் படி, மயூரசர்மா ஒரு வைதிக பிராமண அறிஞர் என்றும் தலகுந்தாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரிகிறது. இவர் தனது குரு வீரசர்மாவின் பேரனும், மாணவருமான பந்துசேனரின் மகன் ஆவார்.[1][2][6] குடும்ப வீட்டிற்கு அருகில் வளர்ந்த கடம்ப மரத்தின் பெயர் குடும்பத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இவர்கள் இடைக்காலத்தில் பிரபலமாக இருந்ததைப் போல பிராமண கலாச்சாரத்தை கடைபிடிக்கும் கன்னடிகா திராவிடக் குடும்பம் என்று மேலும் கூறுகிறது.[7] குட்னாபூர் கல்வெட்டு இவரது பெற்றோரை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இவர் ஒரு சத்திரியரின் தன்மையைப் பெற்றார்.

Remove ads

இராச்சியம் உருவாகுதல்

தலகுந்தா கல்வெட்டின்படி, மயூரசர்மா பல்லவர்களின் தலைநகரான காஞ்சிக்குச் சென்று தனது குருவும் தாத்தாவுமான வீரசர்மாவுடன் தனது வேத படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சி அந்த நேரத்தில் ஒரு முக்கியமான கற்றல் மையமாக இருந்தது. அங்கு, ஒரு பல்லவ காவலரால் (குதிரைவீரன்) அவமானப்படுத்தப்பட்டதால், கோபத்தில் மயூரசர்மா தனது படிப்பைக் கைவிட்டு, அவமானத்திற்கு பழிவாங்குவதற்காக வாளை எடுத்தார்.[8] கல்வெட்டு இந்த நிகழ்வை தெளிவாக விவரிக்கிறது:

தலகுந்தா பிராந்தியத்தின் மீதிருந்த பல்லவர்களுக்கு எதிராக மயூரசர்மாவின் எழுச்சி உண்மையில் காஞ்சியின் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்ட சத்திரிய ஆதிக்கத்திற்கு எதிராக பிராமணர்களின் வெற்றிகரமான கிளர்ச்சி என்று கூறலாம். கோபத்தின் காரணமாக இன்றைய நவீன கர்நாடக பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல் இராச்சியம் உருவானது.[6] இருப்பினும் மற்ற அறிஞர்கள் மயூரசர்மாவின் கிளர்ச்சி வட இந்தியாவின் சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பால் நிகழ்ந்த பல்லவ விஷ்ணுகோபனின் தோல்வியுடன் ஒத்துப்போனது.[9] பல்லவர்களை தோற்கடித்தும், கோலார் குறுநில மன்னர்களை அடிபணியச் செய்ததன் மூலம் சிறீபர்வதாவின் காடுகளில் (ஆந்திராவின் நவீன ஸ்ரீசைலம்) தன்னை நிலைநிறுத்துவதில் இவர் முதல் வெற்றி பெற்றார். கந்தவர்மனின் கீழுள்ள பல்லவர்களால் இவரை தடுக்க முடியவில்லை. மேலும் இவரை அமர கடல் (மேற்கு கடல்) முதல் மலப்பிரபா ஆறு வரையிலான பகுதிகளில் ஒரு இறையாண்மை ஆட்சியாளராக அங்கீகரித்தனர்.[10] சில வரலாற்றாசிரியர்கள் மயூரசர்மா ஆரம்பத்தில் பல்லவர்களின் இராணுவத்தில் ஒரு தளபதியாக நியமிக்கப்பட்டதாக கருதுகின்றனர். ஏனெனில் கல்வெட்டு "சேனானி" போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், சில காலத்திற்குப் பிறகு, பல்லவ விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் (அலகாபாத் கல்வெட்டுகளிலின்படி) தோற்கடித்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனது தலைநகராக பனவாசியுடன் (தலகுந்தா அருகில்) ஒரு இராச்சியத்தை உருவாக்கினார்.[11]

Remove ads

போர்கள்

மற்ற போர்களில், இவர் திரிகூடர்கள், அபிராக்கள், செந்திரகாசர்கள், பல்லவர்கள், பரியாத்திரர்கள், சகஸ்தானர்கள், மௌகாரிகள், புன்னாதர்களை தோற்கடித்தார் என்றும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.[12] தனது வெற்றிகளைக் கொண்டாடுவதற்காக, இவர் பல குதிரைகளி பலியிட்டார், என்றும் தலகுந்தாவின் பிராமணர்களுக்கு 144 கிராமங்களை (பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டது) வழங்கினார் என்றும் மேலும் கூறுகிறது.[13] பண்டைய பிராமண நம்பிக்கையை புத்துயிர் பெறுவதற்கும், அரச சடங்குகள் மற்றும் அரசாங்கத்தின் தொடர்புடைய செயல்பாடுகளைச் செய்வதற்கும் ஒரு முயற்சியாக, இவர், அகிச்சத்ராவிலிருந்து கற்றறிந்த வைதிக பிராமணர்களை அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. அவ்யக பிராமணர்கள் தங்கள் வம்சாவளியை 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பிராமண குடியேற்றவாசிகளிடமிருந்து அஹிச்சத்ரா பிராமணர்கள் அல்லது அஹிகாரு / ஹவிகாரு என்று அழைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.[14]

பிரபலமான ஊடகங்களில்

  • கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்து 1975ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான "மயூரா"வில் மயூரசர்மா கதாநாயகனாக இருந்தார். பல்லவ ஆட்சியாளர்களுடனான மோதலின் ஆரம்ப ஆண்டுகளின் சித்தரிப்பு மற்றும் கதம்ப சிம்மாசனத்தை அடைதல் பற்றிய விவரிப்பு இருந்தது.
Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads