கதாகாலட்சேபம்
கதை சொல்லும் முறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதாகாலட்சேபம் (ⓘ) அல்லது அரிகதை, காலட்சேபம், அரிகதா காலட்சேபம் (Kathakalakshepa) என்பது பழைய காவியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் புராணங்களையும் வேறு கதைகளையும் இசை/ உரைநடைவழி குறிப்பிட்ட பாணியில் நிகழ்த்திக் காட்டுவது ஆகும்.
வரலாறு
இக்கலையானது மராட்டியத்தில் தோன்றியது. மராட்டிய துக்காராம், ராமதாஸ், ஜனேஸ்வரர் போன்றோர் பாகவதம், ராமாயணம், பாரதக் கதைகளைப் பாடிய முறைதான் மராட்டிய மண்ணில் கதாகாலட்சேபம் தோன்றக் காரணம் என்பார்கள். இது பாண்டுரங்க பண்டரிநாத வழிபாட்டு மரபிலிருந்து வந்தது என்றும் கூறுகிறார்கள். தஞ்சை மராட்டிய அரசர்களின் காலத்தில் தமிழகத்தில் இது பரவியது.
நிகழ்த்தும் முறை
கதாகாலட்சேபத்துக்குரிய இசைக்கருவிகள் ஆர்மோனியம் அல்லது வயலின், மிருதங்கம், சிப்ளாக்கட்டை, ஜால்ரா என்னும் தாளம் போன்றவை இருப்பது பொதுமரபு.[1] சில பாகவதர் குழுக்களில் அவர்களின் வசதிக்கேற்ப வேறு கூடுதல் இசைக்கருவிகளயும் பயன்படுத்தியுள்ளனர். கதாகாலட்சேப நிகழ்ச்சி மணிகணக்கில் நிகழ்தப்படும். தமிழ், சமஸ்கிருத கலப்பில் பிராமணப் பேச்சு வழக்கில் கதை விளக்கம் அமைந்திருக்கும், பாட்டுகள் கர்னாடக, இந்துஸ்தானி இசையிலும் நாட்டார் இசை வடிவிலும் இருக்கும், பார்சி அரங்கின் செல்வாக்கும் இதில் உண்டு.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads