கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் தம்பலகாமம், கிண்ணியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மேற்கு எல்லையை அண்டி அனுராதபுரம் மாவட்டமும், கிழக்கில் சேருவிலை பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் பொலநறுவை மாவட்டமும் அமைந்துள்ளன. 404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 23 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.[1]

விரைவான உண்மைகள் கந்தளாய் Kanthalai, நாடு ...

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 46,641 ஆகும். பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இப்பிரிவில், 5,108 முசுலிம்களும், 1,534 இலங்கைத் தமிழரும், 37,448 சிங்களவரும், 2,478 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 115 பேர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads