கனக செந்திநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். 1939 முதல் உபகுப்தன், பரிதி, செவ்வேல், வேல், பரதன் எனப் பல புனைபெயர்களிலும், கனக செந்திநாதன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்.[2] கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை ஈழகேசரியில் அறிமுகம் செய்து புகழ் பெற்றார்.[2] "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.

Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937-38-இல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]

Remove ads

எழுத்துலகில்

சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். 1939 இல் பாரதி கண்ட சகுமி பற்றி நொள்ளைக் கதைகள் சொல்லும் கள்ளச் சகுனி என்ற முதல் கட்டுரை ஈழகேசரியில் எழுதினார்.[2] மன்னிப்பு என்ற முதலாவது சிறுகதையை 1940 எழுதினார்.[2] ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

Remove ads

சமூகப் பணிகள்

குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார்.[3]

பட்டங்கள்

  • 1964 மே 19 இல் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது.[2]
  • 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது.

இவரது சில நூல்கள்

தளத்தில்
கனக செந்திநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • வெண்சங்கு (சிறுகதைகள்)
  • ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு)
  • வெறும் பானை (நாவல்)
  • விதியின் கை (நாவல்)
  • ஒருபிடி சோறு (நாடகம்)
  • ஈழம் தந்த கேசரி
  • கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
  • கலை மடந்தையின் தவப் புதல்வன்
  • நாவலர் அறிவுரை
  • கடுக்கனும் மோதிரமும்
  • திறவாத படலை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads