கணிகங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads

கணிகம் (plastid) (Greek: πλαστός; plastós: formed, molded – பன்மை கணிகங்கள்) என்பது படலஞ்சூழ் தாவர உறுப்பாகும்.[1] இவை தாவர, பாசி, பிற முழுக்கருவன் உயிரிகளின் உயிர்க்கலங்களில் அமைந்துள்ளன. இவை கலத்திடைவாழ் அக இணைவாழ்வி நீலப்பசும் குச்சுயிரிகளாகும். எடுத்துக்காட்டுகளாக, ஒளிச்சேர்க்கை செய்யும் பசுங்கணிகங்கள், நிறந் தொகுத்துத் தேக்கும் நிறக்கணிகங்கள், சற்றே வேறுபடும் நிறமற்ற கணிகங்கள் ஆகியன அமைகின்றன.
நிலத் தாவரங்களின் கவைப்பிரிவான தொல்கணிக உயிரிகளான செம்பாசிகளிலும் பசும்பாசிகளிலும் தான் முதன்முதலில் அக இணைவாழ்வு நிகழ்வு1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கண்டது. இதில் குளோயெவோமார்கரித்தா பேரினத்தைச் சேர்ந்த இணைவாழ்வு நீலப்பசும் குச்சுயிரிகளும் அமைந்தன.[2][3] பிற, முதன்மையான அக இணைவாழ்வு நிகழ்வு, ஒளிச்சேர்க்கை செய்யும் பவுலினெல்லா அமீபியாயிடுகளில் 90 முதல் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.இந்தக் கணிகங்கள் புரோகுளோரோகாக்கசு, சைனெக்கோகாக்கசு பேரினங்களின் ஒளிச்சேர்க்கைக் கவைப்பிரிவுக்கு உரியனவாகும்.[4][5]

Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads