கனிமம் (ஊட்டச்சத்து)

From Wikipedia, the free encyclopedia

கனிமம் (ஊட்டச்சத்து)
Remove ads

ஊட்டச்சத்து சார்ந்த சூழலில், கனிமம் (mineral) என்பது ஒரு தனிமம் ஆகும். சில "கனிமங்கள்" உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை ஆகும், ஆனால் பெரும்பாலானவை அவ்வாறல்ல.[1][2] அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நான்கு குழுக்களில் கனிமங்களும் ஒன்றாகும். மற்றவை உயிர்ச்சத்துகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஆகியனவாகும்.[3]

Thumb
துத்தநாகம் தேவைப்படும் ஒரு நொதியமான கார்போனிக் நீர்நீக்கவூக்கி (இந்தப் படத்தின் நடுவில் மையத்திற்கு அருகில் சாம்பல் கோளம்), கார்பனீராக்சைடை வெளியேற்றுவதற்கு அவசியமானதாகும்.

மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய கனிமங்கள் கல்சியம், பாசுபரசு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஆகியனவாகும்.[1] மீதமுள்ள தனிமங்கள் இம்மியத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இம்மியத் தனிமங்கள் இரும்பு, குளோரின், கோபால்ட்டு, செம்பு, துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்டினம், அயோடின், செலீனியம் ஆகியனவாகும்.[4] மனித உடலில் எடை அடிப்படையில் 96% கரிமம், ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன் ஆகிய நான்கு தனிமங்கள் (CHON) உள்ளன. இத் தனிமங்கள் பொதுவாக ஊட்டச்சத்துக் கனிமங்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.

தாவரங்கள் பொதுவாக மண்ணில் இருந்து கனிம ஊட்டச்சத்தைப் பெறுகின்றன.[5] இந்தத் தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் உட்கொள்ளப்படுகின்ற போது இந்த ஊட்டச்சத்தானது உணவுச் சங்கிலி ஊடாக அந்த விலங்குகளை சென்றடைகின்றது. ஊனுண்ணிகள் இந்த விலங்குகளை உட்கொள்வதிலிருந்து இந்தத் தாதுக்களைப் பெறுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads