கப்பி கோகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கப்பி கோகன் (ஆங்கிலம்: Happy Hogan) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ, ராபர்ட் பெர்ன்ஸ்டைன் மற்றும் டான் ஹெக் ஆகியோரால், செப்டம்பர் 1963 இல் வெளியான டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #45 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.
இவரின் பாத்திரம் வழக்கமாக அயன் மேன் / டோனி ஸ்டார்க் இடம்பெறும் கதைகளில் துணைக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார், அவருக்காக இவர் வாகன ஓட்டுநர், மெய்க்காப்பாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றுகிறார். இவர் தனது முதலாளியுடன் நெருங்கிய நண்பர்கரா இருக்கிறார். இவர் தனது முதலாளியுடன் நெருங்கிய நண்பர்கரா இருக்கிறார், மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தின் மீநாயகனாக தனது அடையாளத்தைக் கண்டறிந்த முதல் நபர்களில் ஒருவர். அவர் டீன் அபோமினேஷனின் தந்தையும் ஆவார், பின்னர் பெப்பர் பாட்சை திருமணம் செய்துகொண்டார்.
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக இயக்குநர் ஜான் பெவ்ரோ என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன்-மேன் (2008), அயன் மேன் 2 (2010), அயன் மேன் 3 (2013), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017),[1] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[2] போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads