டிஸ்னி+

From Wikipedia, the free encyclopedia

டிஸ்னி+
Remove ads

டிஸ்னி+ (Disney+) என்பது ஒரு அமெரிக்க நாட்டு வால்ட் டிஸ்னி நிறுவனதிற்கு சொந்தமான கோரிய நேரத்து ஒளித ஓடிடி ஊடக ஓடை சேவை ஆகும்.[1] இந்த சேவை முதன்மையாக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி தயாரித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிக்கிறது. இது டிஸ்னி, பிக்சார், மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியாகிரபிக் மற்றும் ஸ்டார் போன்ற தயாரிப்புகளின் உள்ளடக்கத்தையும் விளம்பரப்படுத்துகிறது. அசல் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களும் டிஸ்னி+ இல் விநியோகிக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் வலைத்தள வகை, சேவைத்தளங்கள் ...

டிஸ்னி+ நவம்பர் 12, 2019 அன்று அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்தில் அறிமுகமானது, மேலும் ஒரு வாரம் கழித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ வரை விரிவடைந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 2020 இல் மற்றும் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சேவை மூலம் கிடைத்தது, இது டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என மறுபெயரிடப்பட்டது. கூடுதல் ஐரோப்பிய நாடுகள் 2020 செப்டம்பரில் சேவையைப் பெற்றன, இந்த சேவை நவம்பர் 2020 இல் லத்தீன் அமெரிக்காவிற்கு விரிவடைந்தது. அங்கு நேர்மறையான வரவேற்பை பெற்று மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களாலும் விமர்சிக்கப்பட்டது. இது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஊடக கவனத்தை ஈர்த்தது. டிஸ்னி+ அதன் முதல் நாள் செயல்பாட்டின் முடிவில் பத்து மில்லியன் பயனர்கள் சந்தாவில் சேர்ந்துள்ளனர். இந்த சேவையில் 2020 டிசம்பர் 2 ஆம் தேதி வரை 86.8 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று இருந்தது.

Remove ads

வரலாறு

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஊடக ஓடை சேவையை சோதிக்க 'டிஸ்னி லைஃப்' என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்தில் தொடங்கப்பட்டது.[2][3] இது இறுதியில் மார்ச் 24, 2020 அன்று 'டிஸ்னி+' என்ற பெயரில் மாற்றப்பட்டது.[4]

நாடு வாரியாக

Thumb
  கிடைக்கிறது
  வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டது
  மூன்றாம் தரப்பு விநியோகம்
மேலதிகத் தகவல்கள் Release date, Country/Territory ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads