கமில் மிசார
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கமில் மிசார (Kamil Mishara, சிங்களம்: කමිල් මිෂාර; பிறப்பு: 24 ஏப்பிரல் 2001) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக 2022 பெப்ரவரியில் விளையாடினார்.[1]
Remove ads
தொடக்க வாழ்க்கை
மிசார பாணந்துறை மகாநாம கல்லூரியில் தொடக்கக் கல்வியையும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். துடுப்பாட்டப் போட்டிகளில் பாடசாலை அனியில் சேர்ந்து விளையாடி வந்தார்..[2][3][4][5] 2019 இல் அவ்வாண்டின் சிறந்த பாடசாலைத் துடுப்பாட்ட விருதைப் பெற்றார்.[6][7]
துடுப்பாட்ட வாழ்க்கை
மிசார தனது முதலாவது இருபது20 போட்டியை 2019 பெப்ரவரி 19 இல் நொண்டெசுகிறிப்ட்சு துடுப்பாட்டக் கழகத்திற்காக விளையாடினார்..[8] 2020 சனவரியில், இலங்கை அணியின் 19-அகவைக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் பெயரிடப்பட்டார்.[9]
2022 சனவரியில், இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[10] தனது முதலாவது இ20ப போட்டியை 2022 பெப்ரவரி 20 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.[11]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads