கம்சாத்கா பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்சாத்கா பிரதேசம் (Kamchatka Krai, உருசியம்: Камча́тский край) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசம் ( கிராய்) ஆகும். காம்சட்கா ஒப்லாஸ்து மற்றும் கோர்யாக், தன்னாட்சி பிராந்தியம் ஆகிவற்றின் இணைப்பின் விளைவாக, ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் விளைவாக 2005 அக்டோபர் 23 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில். இந்தப் பிரதேசம் 2007 சூலை 1 அன்று உருவாக்கப்பட்டது.
இந்த பிராந்தியத்தின் தலை நகரம் பீட்ரோபவிவோவிஸ்க் - கம்சாட்ஸ்கே ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 322,079 ஆகும்.[7]
Remove ads
நிலவியல்
கம்சாத்கா பிரதேசம் கம்சாத்கா தீபகற்ப நிலப்பரப்பைச் சேர்ந்த. தீபகற்பத்தை ஒட்டிய முதன்மை நிலம், கரகின்ஸ்கி தீவு, மற்றும் கமாண்டர் தீவு ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலின் பிரிங் கடலும்,(கடற்கரையின் நீளம் 2000 கி.மீ., மேற்கில் – ஒக்கோட்ஸ் கடல் (கடற்கரையின் நீளம் 2000 கி.மீ.). கொண்டதாக உள்ளது.
மலைத் தொடர்கள்; சிறிடின்னி மலைத்தொடர் (நீளம் 900 கி.மீ.), ஈஸ்ட், விட்வைஸ்கே, பின்சின்ஸ்கை, பகாசின்ஸ்கை, ஒலேயுட்ரோஸ்க் போன்றவை. உயரமான மலைகள்: குவக்யோந்டன் (2613 மீ), ஐஸ் (2562 மீ), அக்யூட் (2552 மீ), ஷிஷில் (2531 மீ), டைலீ எரிமலை (2234 மீ) .
இந்த மண்டலத்தில் காம்சாட்கா எனும் செயல்படும் எரிமலையும், 300 பெரிய நடுத்தர அளவு எரிமலைகளும் உள்ளன. இதில் 29 எரிமலைகள் விழித்திருப்பவை. யூரேசியாவின் மிகப்பெரிய எரிமலையான – குளுச்வீஸ்கே (உயரம் 4750 மீ) உள்ளது. எரிமலைகளின் செயல்பாட்டால் இப்பிராந்தியத்தில் கனிமங்கள் நிறைந்துள்ளன, மேலும் புவி வெப்பச் செயல்பாட்டின் வெளிப்பாடாக, நிலவியல் கல்விக்கு உதவக்கூடியதாகவும், வெந்நீர் ஊற்றுகள் கொண்ட பிரதேசமாகவும் விளங்குகிறது.
இப்பகுதியின் காலநிலை பெரும்பாலும் துணை ஆர்ட்டிக் கால நிலையாக உள்ளது கடற்கரைப் பகுதிகளில் பருவமழை பொழிகிறது.
இயற்கை



தீபகற்பத்தின் பெரும்பகுதி ஸ்டோன் பிர்ச் காடுகளால் சூழப்பட்டுள்ளது. மலைச்சரிவுகளின் மேல் பகுதிகளில் பூச்ச மரம், சிடார் இல்ஃபின் ஆகியவற்றைக் கொண்டும், மையப் பகுதியில், குறிப்பாக காம்சாட்கா ஆற்றுப் பள்ளத்தாக்கில் மிகப் பரந்த அளவிலான காடுகளைக் கொண்டதாக உள்ளது. வெள்ளச் சமவெளிகளில் உள்ள காடுகளில் நெட்டிலிங்கம், பூச்ச மரம், ஹேரி, சூசினியா, வில்லோ ஸ்காலின் ஆகிய மரங்களைக் கொண்டதாக உள்ளது. இரண்டாவது அடுக்கு, மற்றும் அடியில் வளரும் புதர்களில் பொதுவான ஹாவ்தோர்ன் சிலெனோமையாகோடனே, ஆசிய செர்ரி, ரோவன் காம்சட்கா போன்ற புதர்கள் - காம்சட்கா எல்டர்பெரிஸ், ரோஷிப்ஸ் டுபூஷ்கோவே, ரோவன் புசினோலிஸ்டனே, ஹனிசக்கிள் காம்சட்கா, மியாடோவிஸ்வீட், வில்லோ புதர்கள், மற்றும் பல தாவர இனங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதியான காம்சட்கா பை டால் - ஷிலாமைனிக் காம்சட்கா, ஆங்கிலிகா பீர்ச் பூல், 3.4 மீட்டர் வாரக்கூடிய இனிப்பு பாசினிப்பின் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.
சமாசாத்கா மண்டலத்தில் 14.5% பகுதிகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்கு கூட்டமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஆறு பகுதிகளும், நான்கு தேசியப் பூங்காக்கள் ("நலேச்சிவோ", "பைஸ்டிரிங்ஸகே", "சவுத் காம்சட்கா", "குளுச்வ்ஸ்கே") உள்ளன. 22 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் வட்டார முக்கியத்துவம் வாய்ந்தவை; 116 இயற்கை நினைவுச் சின்னங்கள்; நான்கு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் ( இயற்கை பூங்காவான "நீல ஏரி", தென்மேற்கு மற்றும் துருவப்பகுதி சொப்லோவிஸ்கி பாதுகாக்கப்பட்ட பகுதி ) ஆகியவை உள்ளன.
க்ரோனோடிஸ்கி இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பது உருசிய தூரக்கிழக்கில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் இயற்கை அறிவியல் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இயற்கை பகுதியாகும்.[11] இது 1934 இல் உருவாக்கப்பட்டது இதன் தற்போதைய எல்லைப் பகுதியாக 10,990 சதுரகி.மீ. (4,240 சதுர மைல்) உள்ளது.[11] உருசியாவில் இங்கு மட்டுமே பீறிடும் வெந்நீரூற்று உள்ளது, மேலும் பல எரிமலைகள் நிறைந்துள்ளன, இதில் செயல்படும் எரிமலைகளும், இறந்த எரிமலைகளும் அடக்கம். இப்பிராந்தியத்தின் கடும் காலநிலை மற்றும் எரிமலைகள் சூழ்ந்த நிலப்பரப்பால் இது "நெருப்புப் பனி பூமி" என அழைக்கப்படுகிறது.[12]
இங்கு பெரும்பாலும் அறிவியலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர், தோராயமாக ஆண்டுக்கு 3,000 பேர் வருகின்றனர். இவர்களை உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்கின்றனர், ஒரு நாள் கட்டனமாக வசூலிக்கப்படும் தொகை தோராயமாக அமெரிக்க டாலரில் $700 ஆகும்.[12] க்ரோனோட்கே தேசியப் பூங்காவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[13]
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
பொருளாதாரம்
இந்தப் பிராந்தியத்தில் உள்ள முதன்மைத் தொழில்கள் மீன்பிடித்தல், கப்பல் பழுதுபார்த்தல், காட்டியல். நிலக்கரி போன்ற மூலப்பொருள் சார்ந்த தொழில்களாகும்.[14] மேலும் இங்கு எண்ணை வளமும், கனிம வளமும் உள்ளன என்றாலும் இப்பிராந்தியம் இனிமேல்தான் வளர்ச்சியுற வேண்டியுள்ளது.[15]
மக்கள் வகைப்பாடு
மக்கள் தொகை: 322,079 (2010 கணக்கெடுப்பு)[7]
- பிறப்புகள் (2008 சனவரி – நவம்பர்): 3,673 (1000 பேருக்கு 11.55)
- இறப்புகள் (2008 சனவரி – நவம்பர்): 3,554 (1000 பேருக்கு11.17 )[16]
2007 க்கான முதன்மை புள்ளி விவரங்கள்
தரவு:[17]
- பிறப்பு: 3,931 (1000 பேருக்கு 11.32 , நகரம் 11.36 & ஊரகம் 11.20 ).
- இரப்பு: 3,863 (1000 பேருக்கு 11.13, நகரம் 10.49 & ஊரகம் 13.63 ).
- இயற்கையான வளர்ச்சி விகிதம்: ஒரு ஆண்டுக்கு +0.02% (நகரம் +0.09% & ஊரகம் -0.24% ).
இரண்டு தசாப்பதங்களுக்குப் பிறகு, பிராந்தியத்தின் மக்கள் தொகை வளர்வதற்கு பதிலாக 2007 இல் குறைந்தது. எனினும் 2008, முதல் பாதியில் இப்போக்கு மாறியது. மக்கள் தொகை குறையக்காரணம் கிராமப் புறங்களில் இறப்பு விகிதம் மிகுதியாக இருந்ததாகும். பின் இதில் கவணம் செலுத்தப்பட்டது.
- 2012 க்கான முதன்மை புள்ளி விவரங்கள்
- பிறப்புகள்: 4 158 (1000 பேருக்கு 13.0 )
- இறப்புகள்: 3 691 (1000 பேருக்கு 11.5)[18]
கருத்தரித்தல் விகிதம்:[19] 2009 – 1.58 | 2010 – 1.51 | 2011 – 1.61 | 2012 – 1.73 | 2013 – 1.77 | 2014 – 1.85 | 2015 – 1.88(e)
இனக்குழு பட்டியல்
இனக்குழு பட்டியல் (2010):[7]
- உருசியர் – 85.9%
- உக்ரேனியர் – 3.9%
- கோர்யாகர் – 2.3%
- இட்டில்மினர் – 0.8%
- டாட்ரஸ் – 0.8%
- பெலருசியர் – 0.7%
- பிறர் – 5%
- 28,084 பேர் நிர்வாக பதிவுகளில், தங்களது இனம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.[20]
சமயம்
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி y[21] மக்கள் தொகையில் இப்பிராந்தியத்தில் 31.2% உருசிய மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 4% பேர் திருச்சைகளால் ஒருங்கிணைக்கப்படாத பொதுவான கிருத்தவர்கள், 1% பேர் எந்த திருச்சபையையும் சேராத கட்டுப்பாடுமிக்க கிருத்தவர்கள் அல்லது கிழக்கு மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் ஸ்லாவிக் நாட்டுப்பற சமயத்தவர்களாகவோ அல்லது சைபீரிய ஷாமனியராகவோ உள்ளனர், 1% பேர் இசுலாமியர், 1% பேர் சீர்திருத்த கிருத்தவர்கள், 0.4% பேர் இந்து சமயத்தவர்(வைதீகம், வைணவம் அல்லத் தாந்திரீகம்). 23% பேர் சமய நம்பிக்கை அற்றவர்கள், 21% பேர் இறை மறுப்பாளர்கள், 15.4% பேர் பிற சமயத்தவர்கள் அல்லது சமயக் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காதவர்கள்.[21]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads