கம்மாளர்

ஆச்சாரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கம்மாளர் (Kammalar) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடகிழக்கு பகுதியிலும் வாழும் ஒரு தமிழ் சாதியினர் ஆவார். இவர்கள் தச்சர், கொல்லர், கற்தச்சர், தட்டார், கன்னார் என ஐந்து தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

இவர்கள் பூணூல் அணிகின்றனர். இந்த தொழிலை செய்யக்கூடிய தமிழைத்தவிர பிறமொழி பேசக்கூடியவர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் தங்களை விஸ்வகர்மாலா விஷ்வபிராமணர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர். தமிழ் பேசுபவரும், தெலுங்கை பேசுபவரும் உள்ளனர். சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களாக உள்ளனர். மேலும் இவர்கள் வட தமிழ்நாட்டில் ஆச்சாரி என்றும் தென் தமிழ்நாட்டில் ஆசாரி மற்றும் விசுவகர்மா என்ற பொதுப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

Remove ads

சொற்பிறப்பியல்

கம்மாளர் என்ற சொல் "கலை" அல்லது "செயல்பாடு" என்று பொருள்படும், தமிழ் வார்த்தையான கம் என்பதிலிருந்து உருவானது.[2] பண்டைய சங்க இலக்கியங்களில் கம்மாளர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்களை கம்மியர் என்ற பெயரில் குறிப்பிடுகிறது.[3] அவர்களின் பெயர் "கண்களைக் கொடுப்பவர்" என்ற சொற்றொடரிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்கள் கண்களை வழங்குவதைக் குறிக்கிறது.[4]

தமிழ்நாட்டில், தமிழ் ஆச்சாரிகள், தமிழ் கம்மாளர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பொற்கொல்லர்கள் மற்றும் நில உரிமையாளர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில், நாச்சியார்கோயில் நகரத்தில் உள்ள கம்மாளர் சமூகத்தினர், நாச்சியார்கோயில் அலங்கார பித்தளை விளக்குகள் தயாரிப்பதில், பெயர் பெற்றவர்கள் ஆவர்.[5]

Remove ads

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads