கறம்பக்குடி

From Wikipedia, the free encyclopedia

கறம்பக்குடிmap
Remove ads

கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இது டெல்டா பகுதியில் உட்பட்டதாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

கறம்பக்குடி பேரூராட்சியானது, தஞ்சாவூர் 36 கி.மீ. , புதுக்கோட்டை 39 கி.மீ. , ஒரத்தநாடு 25 கி.மீ. ,பட்டுக்கோட்டை 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 49 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,352 வீடுகளும், 14,626 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.47°N 79.13°E / 10.47; 79.13 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பள்ளிகள்

  1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுமார் கோவில்
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (செங்கமலம்)
  3. TELC (அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளி
  4. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  5. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
  6. ரீனா மெர்சி ஆங்கிலப்பள்ளி
  7. குத்தூஸ் ஆங்கிலப்பள்ளி
  8. மகாத்மா காந்தி ஆங்கிலப்பள்ளி
  9. ப்ரைட் ஆங்கிலப்பள்ளி

வழிபாட்டு தலங்கள்

  1. ஆனந்தபுரீஸ்வரர் சிவன் திருக்கோயில்
  2. முத்துக்கருப்பையா கோயில்
  3. காசாம்பு நீலமேனி கருப்பையா கோயில் (சின்னக்கருப்பர் கோயில்)
  4. ஐயப்பன் கோயில்
  5. கற்பக விநாயகர் கோயில் (அக்ராஹாரம்)
  6. சந்தான ஆஞ்சநேய சுவாமி கோயில் (அக்ராஹாரம்)
  7. முருகன் கோயில் (புதுக்கோட்டை ரோடு)
  8. மங்கள விநாயகர் கோயில் (வள்ளுவர் திடல்)
  9. முனியாண்டவர் கோயில் (காவல் நிலையம்)
  10. மாரியம்மன் கோவில் (கண்டியன் தெரு)
  11. விநாயகர் கோயில் (செட்டி தெரு)
  12. திருமணஞ்சேரி அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்
  13. ஜும்மா மசூதி (பெரிய பள்ளிவாசல்)
  14. மார்க்கெட் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  15. மஸ்ஜிதே ஹலிமா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  16. அத்தயைபா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  17. மேலப் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  18. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
  19. அசெம்ப்ளீஸ் ஆப் காட் திருச்சபை
  20. கத்தோலிக்க திருச்சபை
  21. வீரமாகாளியம்மன் (அம்புக்கோவில்)
  22. காளியம்மன் கோவில் (அம்புக்கோவில்)
  23. மலையாத்தாளம்மன் (அம்மானிப்பட்டு)
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads