கராத்தே
தற்காப்புக்கலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்ப்படுகின்றன.vHh
ச்சின் என்னும் வகுப்பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது "டி" ("ti") அல்லது "டெ" ("te") என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட்டோவினால், மிங் வம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, சீனாவிலிருந்து வந்தவர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் தீவுகளுக்கு அறிமுகமானது. சிறப்பாக இவை சீனாவின் புஜியன் மாகாணத்திலிருந்தே வந்தன.[3][4] 1392 ஆம் ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண்டைக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக்கினாவாவுக்கு வந்தனர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற்பட்ட அரசியல் மையப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஆயுதங்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாயின. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்காக அடிபந்தாட்டம், மென்பந்தாட்டம், சறுக்குப் பலகை, நீர்ச்சறுக்கு மற்றும் விளையாட்டு மலையேற்றம் ஏற்றம் ஆகியவற்றோடு சேர்த்து பட்டியலிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிஷனின் நிறைவேற்றுக் குழு 2020 ஒலிம்பிக் போட்டியில் மேற்கண்ட ஐந்து விளையாட்டுக்களையும் (அடிபந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் இரண்டையும் ஒரே ஒரு விளையாட்டாகக் கணக்கில் சேர்த்து) சேர்த்துக்கொள்வதை ஆதரிப்பதாக அறிவித்தது.
சப்பானிய வெளியுறவு அமைச்சகத்திக் ஆதரவில் செயல்பட்டு வரும் வெப் சப்பான் என்ற இணையதளம் உலகெங்கிலும் 50 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக கூறுகிறது.[5] 100 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக உலக கராத்தே சம்மேளனம் அறிவித்துள்ளது.[6]
Remove ads
வரலாறு
ஒக்கினாவா
ர்யூக்யூயன் சமுதாயத்தின் பெச்சின் வகுப்பியரிடையே “டெ” (ஒக்கினவன்:டி) என்ற பெயரில் கராத்தே முதன் முதலாகத் தோன்றியது. 1372 ஆம் ஆண்டில் சீனாவின் மிங் வம்சத்தில், சூசான் மன்னர் சத்துடன் வர்த்தக உறவுகள் நிறுவப்பட்ட பிறகு, சில சீன தற்காப்புக் கலை வடிவங்கள் ர்யூக்யூயன் தீவில் சீனாவிலிருந்து வந்த பார்வையாளர்களால் குறிப்பாக புஜியான் மாகாணத்திலிருந்து வந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன குடும்பங்களின் ஒரு பெரிய குழு 1392 ஆம் ஆண்டில் ஒகினவாவிற்கு கலாச்சார பரிமாற்றத்திற்காக சென்றது. அவர்கள் குமுமுரா சமூகத்தை ஸ்தாபித்து, பல்வேறு சீன கலை மற்றும் அறிவியல் அறிவை பகிர்ந்து கொண்டனர் அதில் சீன தற்காப்பு கலைகளும் அடங்கியிருந்தது. 1429 ஆம் ஆண்டில் ஷோ ஹாஷி மன்னரால் ஒக்கினாவா அரசியல் மையமாக மாறிய பின்னர் 1477 ல் ஷோ ஷின் மன்னரால் ஆயதங்கள் தடைசெய்யப்பட்டன. பிறகு 1609 ஆம் ஆண்டில் ஷிமாசு வம்சத்தின் படையெடுப்புக்குப் பின்னர் ஒகினாவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இவை ஒகினாவாவில் நிராயுதபாணி தற்காப்பு கலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான காரணிகளும் ஆகும்.[2]
“டெ” யில் சில சாதாரண பாணிகள் இருந்தாலும் பல பயிற்சியாளர்கள் அவர்களது சொந்த முறைகள் மூலம் கற்பித்தனர். மோட்டோபு குடும்பத்தின் செய்கிச்சி யெஹாராவால் நடத்தப்பட்ட மோட்டோபு-ரியூ பள்ளி இன்றைய நடைமுறையில் உள்ள உதாரணம் ஆகும்.[7] கராத்தேயின் ஆரம்பகால வடிவங்கள் பெரும்பாலும் ஷூரி-டெ, நாஹா-டெ, மற்றும் டோமாரி-டெ என்று அழைக்கப்பட்டன. அவை உருவான நகரங்களின் பெயரால் அழைக்கப்பட்டன.[8] ஒவ்வொரு பகுதியும் அதன் ஆசிரியர்களும் குறிப்பிட்ட காடா, நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர், இது அவர்களின் உள்ளூர் வடிவங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
ஒகினாவன் உயர் வகுப்புகளின் உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் மற்றும் நடைமுறைக் கற்கைகளை படிப்பதற்காக சீனாவுக்கு அடிக்கடி அனுப்பப்பட்டனர். ஒக்கினாவன் தற்காப்பு கலையுடன் ஆயுதமில்லா வெறுங்கை சீன தற்காப்பு கலையான குங்-பூவை இணைப்பதன் காரணமாக ஏறத்தாழ ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு அதிகரித்தன. புஜியன் வெள்ளைக் கொக்கு, தாய் சூ குவான், ஐந்து முன்னோர்கள் மற்றும் கங்கோரூ-கவான் (ஹார்ட் மென்ட் பிஸ்ட்; ஜப்பானிய மொழியில் "கோஜூகன்" உச்சரிக்கப்படுகிறது) போன்ற புஜியன் தற்காப்புக் கலைகளில் காணப்படும் பாரம்பரிய கராத்தே வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது.[9] சாய், டன்ஃபா மற்றும் நஞ்சகு போன்ற பல ஒகினான் ஆயுதங்கள் தென்கிழக்கு ஆசியாவிலும் அதனைச் சுற்றிலும் தோன்றின.
Remove ads
விளையாட்டு
“கராத்தேயில் போட்டிகள் ஏதுமில்லை” என்பது நவீன கராத்தேயின் தந்தை [10] என அழைக்கப்படும் கிச்சின் பனாகோஷி (船 越 義 珍) என்பவரது கூற்றாகும்.[11] இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் இரும்புக் கொளாவி என்ற பொருள்படும் “குமிட்டெ” கராத்தே பயிற்சியின் பகுதியாக இல்லை.[12][13]
கராத்தே பாணி அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[14] இந்த அமைப்புகள் சிலநேரங்களில் பாணியற்ற குறிப்பிட்ட விளையாட்டு கராத்தே அமைப்புகள் அல்லது கூட்டமைப்புகளில் ஒத்துழைக்கின்றன. AAKF / ITKF, AOK, TKL, AKA, WKF, NWUKO, WUKF மற்றும் WKC [15] [16] போன்றவை அவ்வாறான சில விளையாட்டு நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். உள்ளூர் நிலை முதல் சர்வதேச அளவு வரையிலான போட்டிகள் (போட்டிகள்) நடத்தப்படுகின்றன. போட்டிகளானது கராத்தே பள்ளிகள், பாணிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் எதிர்த்து கடா, கொளாவிப்பிடி மற்றும் ஆயுத போட்டிகள் போன்ற பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. வயது, தரம், பாலினம் அடிப்படையில் பல்வேறு சட்டதிட்டங்களுடன் போட்டிகள் பிரிவு வாரியாக நடத்தப்படுகின்றன. போட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பாணியில் (மூடிய) அல்லது எந்தவொரு பாணியிலிருந்தும் எந்த தற்காப்புக் கலைஞரும் போட்டியிடும் விதிகளின் அடிப்படையில் (திறந்த) பங்கேற்கலாம்
உலக கராத்தே சம்மேளனம் (WKF) என்பது மிகப் பெரிய கராத்தே விளையாட்டு அமைப்பு ஆகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே போட்டிக்கு பொறுப்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[17] இந்த அமைப்பு பல்வேறு பாணி கராத்தே விளையாட்டுகளுக்கும் பொதுவான விதிகளை மேம்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான கராத்தே போட்டிகளை அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் தேசிய கராத்தே கமிட்டிகள் ஒருங்கிணைக்கின்றன.
உலக கராத்தே சம்மேளனத்திக் கராத்தே போட்டிகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன: அவை குமிட்டே (kumite) மற்றும் வடிவங்கள் (kata) காட்டா ஆகும். போட்டியாளர்கள் தனிநபர்களாகவோ அல்லது ஒரு குழுவின் பகுதியாகவோ பங்கேற்கலாம். கட்டா மற்றும் கொபுடுக்கான மதிப்பீடு ஒரு நீதிபதிகள் குழுவால் செய்யப்படுகிறது, அதேசமயத்தில் குமிட்டே பிரிவின் மதிப்பீடு பக்கவாட்டில் உதவி நடுவர்கள் உதவியால் தலைமை நடுவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. குமிட்டே போட்டியானது எடை, வயது, பாலியம் மற்றும் அனுபவம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.[18]
உலக கராத்தே கம்மேளனமான WKF மட்டுமே ஒரு நாட்டிலிருந்து ஒரு தேசிய அமைப்பு / கூட்டமைப்பு மட்டும் உறுப்பினர்களை தனது அமைப்பில் சேர அனுமதிக்கிறது.[19] உலக கராத்தே கூட்டமைப்பு ஐக்கிமானது (WUKF) பல்வேறு பாணிகள் மற்றும் கூட்டமைப்புகள் அவற்றின் பாணியோ அல்லது அளவையோ சமரசம் செய்யாமல் தனது அமைப்பில் இணைத்துக்கொள்கின்றன. WUKF ஒரு நாட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டமைப்பு அல்லது சங்கத்தை ஏற்றுக்கொள்கிறது.
விளையாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு போட்டி விதிமுறைகளை பயன்படுத்துகின்றன.[20][21][22][23]
WKF, WUKO, IASK மற்றும் WKC ஆகியவற்றால் பகுதி தொடல் (light contact) விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. முழு தொடர்பு கராத்தே விதிகள். கயோகுஷிங்கை, சீடோக்கிகன் மற்றும் பிற அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன. போகு குமிட்டே (Bogu kumite) (இலக்குகளை முழுத் தொடர்பு மூலம் பாதுகாத்தல்) போன்ற விதிகளை உலக கோசிக்கெ கராத்தே-டோ கூட்டமைப்பால் பயன்படுத்தப்படுகின்றன.[24] ஷிங்கரேடேட்டோ கூட்டமைப்பால் குத்துச்சண்டை கையுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[25] ஐக்கிய மாகாணங்களில (அமெரிக்கா) குத்துச்சண்டை ஆணையம் போன்ற மாநில விளையாட்டு அமைப்பின் அதிகார வரம்புக்குள் விதிகள் மாறுபட்டு இருக்கலாம்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கராத்தே சர்வதேச விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு 2020 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பட இருக்கின்றன.[26][27]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads