கரி

திட எரிபொருள் From Wikipedia, the free encyclopedia

கரி
Remove ads

கரி (ஒலிப்பு) (ஆங்கிலம்-Charcoal) என்பது தாவரங்களும், விலங்குகளும் எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் திட எரிபொருள் ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள நீர், ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் பொருள் கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை தொழிற்சாலைகளில், தீயாற்பகுப்பு / வெப்பச் சிதைவு முறையில் உருவாக்குகின்றனர்.

Thumb
வெப்பச் சிதைவு(Pyrolysis)
Thumb
அடுப்புக்கரி

நம் பூமி அன்னையின் நுரையீரல் எனப்படும், அமேசான் காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. பிரேசில் போன்ற சில நாடுகளின் பொருளாதார வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது.

Remove ads

தோற்றம்

Thumb
திறந்தவெளி கரி உருவாக்கம்,1900, நெதர்லாந்து.
Thumb
எரியும் அடுப்புக்கரி

முதன்முதலாக மானுட பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது. எனினும், உலகின் பல இடங்களில் இதன் பயன்பாடு பரவலாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் மூலப்பொருட்களைத் தொழிற்சாலைகளில் அறிவியல் முறையில் எரிக்கும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாகத் திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் வளி நுழையும் வண்ணம் கட்டிடம் அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.

Thumb
மூடிய நிலைகரி உருவாக்கம், அமெரிக்கா
Remove ads

செயற்கைக் கரி

  • எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும்.
  • மூட்டக் கரி. பச்சை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு வாரம் உலர்ந்ததும் கூம்பாக அடுக்கி அதன் மேலே பயிர் அறுவடை செய்த தட்டை போன்ற புல் வகைகளைச் சார்த்தி சேற்றுமண் கோட்டு அதன்மேல் மெழுகி, உள்ளே தீயிட்டு உள்ளேயே எரிந்து அடுக்கப்பட்ட மரத்துண்டுகளின் அளவுக்கு ஏற்ப நானகைந்து நாள் புழுங்குமாறு செய்து பின்னர் நீர் ஊற்றி அணைத்துக் கரியை எடுத்துக்கொள்வர். மூட்டம் போட்டுச் செய்த கரி மூட்டக்கரி.[1]
Remove ads

சங்க இலக்கியங்களில் கரி

பின்வரும் பொருளில் தமிழ் இலக்கியங்களில் கரி என்னும் சொல் கையாளப்படுகிறது.

சாட்சி கூறுவோன் - இந்திரனே சாலுங் கரி (குறள், 25).

படங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads