கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் (Karikili Bird Sanctuary) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரிக்கிலி ஊராட்சியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் ஆகும். இது சுமார் 61.21-எக்டேர் (151.3-ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1] இச்சரணாலயம் சென்னையிலிருந்து, 75 கி. மி. தொலைவில்செங்கல்பட்டுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 100 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டன.

விரைவான உண்மைகள் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், நாடு ...

கரிக்கிலி வேடந்தாங்கலிலிருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு ஏரிகள் இணைக்கப்பட்டு 1988-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியைச் சுற்றிலும் திறந்தவெளி, நெல் வயல்கள் மற்றும் புதர்க்காடுகள் உள்ளன. கரிக்கிலியிலிருந்து பல புலம்பெயர்ந்த பறவைகளான ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, சாதா உள்ளான் போன்றவை பதிவு செய்யப்பட்டன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துடன் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் முக்கியமான பறவைகள் பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது (இந்தியப் பறவைகள் தளக் குறியீடு-29, A1, இந்தியப் பறவைகள் தள அளவுகோல் - A4iii). பல நீர்ப்பறவைகள் வேடந்தாங்கலைக் கூடு கட்டும் இடமாகவும், காரிகிள்ளியினை உணவு தேடும் இடமாகவும் பயன்படுத்துகின்றன.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads