கருக் குடும்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.[1][2][3]
தனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள்
தனிக் குடும்பம் ┌───────────────────────┼─────────────────────┬─────────────────────────┬ ➊ ➋ ➌ ➍ அப்பா அம்மா மகன் மகள் ┌──────┴──────┐ ┌──────┴──────┐ ➊ ➋ ➊ ➋ அண்ணா தம்பி அக்கா தங்கை
அப்பா
தனிக்குடும்பத்தின் தலைவர். இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தந்தை, பிதா, தகப்பன், என்பனவாகும்.
அம்மா
தனிக்குடும்பத்தின் தலைவி. இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தாய், மாதா, அன்னை என்பனவாகும்.
மகன்
பிள்ளைகளில் ஆண் பிள்ளையை மகன் என்று அழைப்பர்.
மகள்
பிள்ளைகளில் பெண் பிள்ளையை மகள் என்று அழைப்பர்.
Remove ads
பிள்ளைகளுக்குள் உறவுமுறை
பிள்ளைகள் ┌─────────┴────────┐ ➊ ➋ சகோதரன் சகோதரி ┌──────────┴──────┐ ┌──────┴──────┐ ➊ ➋ ➊ ➋ அண்ணா தம்பி அக்கா தங்கை
Remove ads
சகோதரன்
உடன் பிறந்தோரில் ஆண் பிள்ளைகளை சகோதரன் என்று அழைப்பர். சகோதரன் என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.
அண்ணா
சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அண்ணா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட அண்ணன்கள் இருக்கும் பட்சத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குட்டியண்ணன் என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.
தம்பி
சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தம்பி என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தம்பிகள் இருக்கும் பட்சத்தில் பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.
சகோதரி
உடன் பிறந்தோரில் பெண் பிள்ளைகளை சகோதரி என்று அழைப்பர். சகோதரி என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.
அக்கா
சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அக்கா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட பெண் சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் பெரியக்கா, சின்னக்கா, குட்டியக்கா என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.
தங்கை
சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தங்கை என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தங்கைகள் இருக்கும் பட்சத்தில் பெரியதங்கை, சின்னத்தங்கை, குட்டித்தங்கை என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்
Remove ads
வெளி இணைப்புகள்
- The Nuclear Family from Buzzle.com பரணிடப்பட்டது 2017-08-06 at the வந்தவழி இயந்திரம்
- Early Human Kinship was Matrilineal by Chris Knight. (Anthropological debates on the whether the nuclear family is natural and universal).
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads