கருணாநிதி கைது சர்ச்சைகள், 2001
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருணாநிதி கைது சர்ச்சைகள், 2001 அல்லது மேம்பாலங்கள் கட்டுமான கைது சர்ச்சைகள் என்பது 2001 சூன் 30 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எழுந்த சர்ச்சைகளைக் குறிப்பது ஆகும். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் கைது சைய்யப்பட்ட நிகழ்வு இது ஆகும். இந்த நிகழ்வின் துவக்கமானது, எழுபத்தி எட்டு வயதான முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தபோது நடந்தது. அதற்கடுத்த 1 மணி நேரத்திற்குள், கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் சன் டிவி மற்றும் பிற அலைவரிசை நிலையங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் அவரைக் கைது செய்யும் காட்சிகள் காட்டப்பட்டன.[1]

Remove ads
பின்னணி
முதல் தகவல் அறிக்கையானது (எப்.ஐ.ஆர்) 2001 சூன் 29, அன்று சென்னை மாநகர ஆணையர் ஜே. சி. டி. ஆச்சார்யலுவால் வழங்கப்பட்ட புகாரை அடிப்படையாகக் கொண்டது. 2001 மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலிலுக்குப் பிறகு புதியதாக ஜெயலலிதாவின் அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஆச்சார்யலு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் மு. கருணாநிதி ஆட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.[2] இந்தப் புகாரானது சென்னை நகரில் 2016 ஆம் ஆண்டு புதியதாக அமைக்கப்பட்ட சிறு மேம்பாலங்களை அமைத்ததில் அரசுக்கு ரூபாய் 12 கோடி மதிப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டது என்பதாகும். காவல் துறையிடம் சூன் 29 வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணிக்கு புகார் பெறப்பட்ட நிலையில், கைதானது ஒரு சில மணிநேரங்களில் நள்ளிரவுக்குப் பிறகு நடைபெற்றது. புகார் பெறப்பட்டு குறைந்த விசாரணைக் காலத்திலேயே கைது செய்யப்பட்டது குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி எழுதுகையில் "சட்டத்தை நிலை நாட்டுவதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது ஆரம்பக் கட்டத்திலேயே நன்கு தெரிகிறது." என்று குறிப்பிட்டார்[3]
Remove ads
கைது
சூன் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் திமுக தலைவர் மு. கருணாநிதி தனது வீட்டின் மேல்தளத்தில் படுக்கையறையில் இருந்தபோது கதவைத் திறந்த காவல் துறையினர், கருணாநிதியை ஆடை அணிந்து கொள்ளும்படி கூறினர். வீட்டின் தொலைபேசி இணைப்பை காவல் துறையினர் துண்டித்தனர். தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு காட்சியில் வீட்டினுள் நுழைந்த காவல் துறையினர் தள்ளியதால் கருணாநிதி கீழே தடுமாறி விழுந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற முரசொலி மாறனை தாக்கிய காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மாறன் இதய நோயாளியாக இருந்ததால் தன் மார்பில் செயற்கை இதயமுடுக்கியை பொறுத்தி இருந்தார். கைது செய்யப்பட்ட பிறகு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[4] த. ரா. பாலு மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மு. க. ஸ்டாலின் ஒரு நீதித் துறை நடுவரிடம் சரண்டைந்தார்.[5] இந்தக் கைது தொடர்பாக இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநரிடம் இருந்து அறிக்கை கோரினார்.[6][7] இந்தக் கைதை அரசில் தளத்தில் பல பிரிவுகளாக உள்ளவர்களும் கண்டித்தனர்[8] இதை மனித உரிமைக் குழுக்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அரசியல் கூட்டு வைத்திருந்த இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்டவையும் கண்டித்தன.[9]
Remove ads
பின் விளைவுகள்
இந்தக் கைதில் காவல்துறை கையாண்ட பல தவறுகளை நீதிமன்றம் கண்டுபிடித்து கண்டித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் பாத்திமா பீவி இரண்டு மாதங்களில் பதவி விலகினார். மு. கருணாநிதி மற்றும் இரண்டு ஒன்றிய அமைச்சர்களை கைது செய்தததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பே இதற்கு உடனடி காரணமாக ஆனது. அரசியல் சட்டத்தைக் காப்பாற்றத் தவறியமைக்காக ஒன்றிய அமைச்சரவை ஆளுநர் பாத்திமா பீவியை நீக்குமாறு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்ததையடுத்து, அவர் தன் பதவியில் இருந்து விலகினார்.
குற்றப்பத்திரிக்கை
நான்கு ஆண்டுகள் கழித்து 2005 ஆண்டு இதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடத்தைப் பற்றி நீதிமன்றத்தில் கேள்விகள் எழுந்தன.[10]
வெளி இணைப்புகள்
- Judge calls Karunanidhi arrest abuse of power
- Personal agenda
- Former Chief Minister M Karunanidhi arrested actress jyothika alook involved with the judges in the arrest but the news not spoken throughly.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
