த. ரா. பாலு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு (டி. ஆர். பாலு, பிறப்பு: சூன் 15, 1941) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
இவர் சூன் 15, 1941 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள மைய பல்தொழில் நுட்பப் பயிலத்தில் தொழிற்கல்வியும், பின்னர் புதுக்கல்லூரியில் பி. எஸ். சி படிப்பையும் படித்து முடித்தார்.
இவருக்கு ரேனுகா தேவி மற்றும் டி. ஆர். பி. பொற்கொடி என இருமனைவிகளும், ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு என மூன்று மகன்களும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
இவர் தன்னுடைய பதினாறாம் வயதில் திமுகவில் இணைந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் பெட்ரோலிய துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Remove ads
போட்டியிட்ட தேர்தல்களும், வகித்த பதவிகளும்
- 1986–1992 : மாநிலங்களவை உறுப்பினர்
- 1996: 11வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை)
- 1996-1998: பெட்ரோலியத் துறை அமைச்சர்
- 1998: 12வது மக்களவை உறுப்பினர் (இரண்டாம் முறை)
- 1999: 13வது மக்களவை உறுப்பினர் (மூன்றாவது முறை)
- 1999-2003: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
- 2004: 14வது மக்களவை உறுப்பினர் (நான்காவது முறை)
- 2004-2009: கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்
- 2009: 15வது மக்களவை உறுப்பினர் (ஐந்தாவது முறை)[7]
- 2019: 17வது மக்களவை உறுப்பினர் (ஆறாவது முறை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads