கருணானந்தம்

தமிழ் கவிஞர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருணானந்தம் (15 அக்டோபர் 1925 -27 செப்டம்பர் 1989) என்பவர் ஒரு தமிழ்ப் பாவலர் ஆவார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர் அன்று அறியப்படும் இவரின் படைப்புகளை 2007 - 08 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. இருபதாம் நூற்றாண்டின் மருமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் காவியக் கவிஞர் என்ற தகுதியும் பெற்றார். மேலும் இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி அதை வெளியிட்டுள்ளார் அதனால் இவர் பெரியாரின் வரலாற்றாளர் (periyar's biographer) என்ற பெயரையும் பெற்றார்.

Remove ads

வாழ்கை குறிப்பு

கருணானந்தம் 1925 அக்டோபர் 15 அன்று இல் தஞ்சாவூர் மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சுந்தரமூர்த்தி, ஜோதியம்மாள் ஆவர். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம், குடந்தை அரசினர் கல்லூரி உள்ளிட்டக் கல்விக்கூடங்களில் பயின்றார். தமிழாசிரியராகவேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கிய ,இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆனால் இவரது தந்தை இவரை அரசு அதிகாரியாக்கவேண்டும் என்று விரும்பியதால் 1946 இல் மத்திய அரசுப் பணியில் இணைந்தார். 1969 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணியைத் துறந்து, தமிழ்நாடு அரசுச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பரப்புரை அலுவரலாக நியமிக்கப்பட்டு துறை இயக்குநராக உயர்ந்தார்.

Remove ads

அரசியல் ஈடுபாடு

இளம் வயதிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கபட்டார். 1943 இல் குடந்தையில் தவமணியரசனுடன் இணைந்து திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றிவித்தார். கருஞ்சட்டைப் படையின் அமைப்பாளராக பெரியார் இவரை நியமித்தார். அண்ணாதுரை திராவிட முன்னுற்றக் கழகத்தைத் துவக்கியபோது அதில் இணைந்தார்.[1]

படைப்புகள்

  1. அண்ணா காவியம் [2]
  2. அண்ணா சில நினைவுகள் (உரைநடை)[3]
  3. கனியமுது [4]
  4. சுமைதாங்கி [5]
  5. தந்தை பெரியார் [6]
  6. பூக்காடு(கவிதை) [7]

சான்றாவணங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads